மேலும் அறிய

பாகிஸ்தானில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்த 15 லட்சம் பேர்!

இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை நிறைவு செய்த 40 சதவீதம் பேருக்கு பாகிஸ்தானில் வேலை இல்லை என கூறுகிறது. பாகிஸ்தானில் படித்த பலர் வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், M.Phil படித்தால்...

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதால் உயர்நீதிமன்ற பியூன் வேலைக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் 6.5 % இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார். ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி நிறுவனமான (PIDE) நடத்திய ஆய்வு ஒன்றில் அந்நாட்டில் 16 சதவீதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தானில் பட்டம் படித்தவர்களில் 24 சதவீதம் பேர் வேலை இன்றி தவிப்பதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான டான் தெரிவிக்கிறது.

அண்மையில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் ஒன்றில் புயூன் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்து இருந்தனர். இது குறித்த விளம்பரத்தை பார்த்த பலர் போட்டிப் போட்டுக் கொண்டு பியூன் வேலைக்காக விண்ணப்பித்தனர். இந்த பணிக்காக இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் M.Phil பட்டம் படித்த பலர் புயூன் வேலைக்கு விண்ணப்பித்து இருப்பது அந்நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தின் வீரியத்தை உணர வைத்து இருக்கிறது.

இது குறித்து ஆய்வு நடத்தி இருக்கும், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி நிறுவனமான (PIDE) மேலும் தெரிவிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை நிறைவு செய்த 40 சதவீதம் பேருக்கு பாகிஸ்தானில் வேலை இல்லை என கூறுகிறது. பாகிஸ்தானில் படித்த பலர் வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், M.Phil படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என எண்ணி அதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்த 15 லட்சம் பேர்!

இதுபோன்ற தகவல்கள் புள்ளி விபரத்தில் சேர்க்கப்படவில்லை. இதையும் சேர்த்து கணக்கிட்டால் பாகிஸ்தானில் வேலையில்லாமல் தவிப்பவர்களின் சதவீதம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அரசு, ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாகவும், ஆராய்ச்சி மாணவர்கள் பலர் வெளிநாடுகளை நாடி செல்லும் நிலை உள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இயங்கி வரும் சில ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை வாட்டி வதைத்து வரும் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார தாக்கம் பலரை வேலை இழக்க வைத்து இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் மட்டும் விதிவிலக்கு அல்ல. அங்கு கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். உலகிலேயே அதிக மக்கள் தொகையில்  5 வது இடத்திலும், அதிக தொழிலாளர்களை கொண்ட நாடுகளில் 9 வது இடத்திலும் பாகிஸ்தான் உள்ளது.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget