சரியான தூக்கம் இல்லன்னா இவ்வளவு சிக்கல் வரும்..! தூக்கமும்... உடல்நலமும்!
தூக்கக் குறைவு முதலில் கை வைப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது தான்
நம் உடலுக்குப் போதுமான தூக்கம் கிடைக்காதபோது அது நமது உடலைப் பல்வேறு வகையில் பாதிக்கும். அதானாலேயே மருத்துவர்கள் போதுமான தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்திக் கூறுகிறார்கள்.
தூக்கக் குறைவு முதலில் கை வைப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது தான். எதிர்ப்புத் திறன் தூக்கக் குறைபாட்டால் சரியும் பொழுது நோய்கள் வருவது எளிதாகிறது. நோய்கள் வரவு மேலும் தூக்கத்தைக் குறைக்கும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
மேலும், குறைவான நேரம் தூங்குவது, தேவைக்கு அதிகாமான நேரம் தூங்குவது இரண்டுமே இதயத்தைப் பாதிக்கும். இதய நோய்கள், பக்கவாதம் முதலியவை வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைந்த நேர தூக்கம் ஏற்படுத்துகிறது. இரவு நேரப் பணியில் இருப்பவர்கள் போதுமான அளவு தூங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
தூக்கம் தொலைந்தால் அது மூளையின் யோசிக்கும் திறனையும் வீழ்த்தும். மறதி, முடிவுகள் எடுக்கும் வேகம் குறைவது, தடுமாற்றம், அசதி போன்றவை ஏற்படுகிறது. குறைவான தூக்கம் பாலுணர்வையும் பாதிக்கிறது. இது தவிர, உற்சாகமின்மை, சோர்வு போன்றவை டெஸ்டோஸ்டீரான் சுரப்பு குறைவதால் ஏற்படும் மற்ற விளைவுகள்.
தூக்க பாதிப்பு எடை அதிகரிப்பதை உறுதி செய்கிறது. ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்கள் மூன்று வருடங்களில் அதிக எடை உள்ளவர்களாக மாறுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
தூக்கத்தில் ஏற்படும் நீண்ட கால மாறுதல்கள் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன. நீண்ட நேரம் தூங்குவதோ குறைவான நேரமே தூங்குவதோ இன்சுலின் சுரப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தூக்க இழப்பினால் விபத்துகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாகிறது. இரவு நேரப் பணியில் இருப்பவர்கள், லாரி ஓட்டுனர்கள் போன்றோர் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் சரியாக உறங்கவில்லை என்பது தெரிந்தால், நீங்கள் வண்டி ஓட்ட தயாராகும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது.
தூக்கக் குறைவு நமது தோலையும் பாதிக்கும். சுருக்கங்கள், நிறம் வெளிறி காணப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )