Monsoon Health Tips: மழைக்காலத்தில் தொற்று நோய்களுக்கு குட்பை சொல்லுங்க; இதோ உங்களுக்கான டிப்ஸ்..
Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மழை காலம் வந்தாலே கொண்டாட்டம்தான். வெப்பம் குறையும். ஜில்லென்று காற்று வீசும். மழையில் நனையலாம். மழை நீரில் பேப்பர் கப்பல் விடலாம். மழை, டீ, இசை (மழை, டீ, இளையராஜா/ யுவன்) என சமூக வலைதளங்களில் ஸ்டேடஸ் வைக்கலாம். அதோடு இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் பரவலும் தீவிரமடையும். அதுவும், குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அதை சமாளிப்பது சிக்கலாகிவிடும். நமக்கு எவ்வளவு மழை பிடிக்குமோ, அந்த அளவுக்கு பாக்ட்ரீயா, வைரஸ் ஆகியவற்றிற்கும் மழை என்றால் அவ்வளவு ப்ரியம். மழை என்றால் வானிலை நல்லா இருக்கும். அவ்வளவாக வியர்க்காது.
இப்படி மழையை மகிழ்ச்சியுடன் கொண்டாக நிறைய காரணஙகள் உள்ளன. ஆனால், சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் இருந்து பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமிருக்கிறது. கண்ணில் தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. மழை காலத்தில் பதிவாகும் தொற்று நோய்களில் கண்களில் ஏற்படுது அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் மட்டும் 20-மில்லியன் கண் தொடர்பான தொற்று நோய் பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், கிருமிகள் வளர ஏதுவான தட்பவெப்ப நிலை இருக்கும். இதனாலேயே,கண்களில் தொற்று ஏற்படுது அதிகம். கைகளால் அடிக்கடி கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக,குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எதாவது பிரச்சனையென்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
மழை காலம் - கவனிக்க...
சுத்தம் பேணுதல்
மழை நாட்களில் தினமும் குளித்துவிட்டு உடம்பில் ஈரம் இல்லாதபடி துவட்ட வேண்டும். ஈரமாக உள்ள ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம். ஈரமான செருப்பு/ஹூ போன்றவற்றை நீண்ட நேர அணிய கூடாது. இவை பாக்டிரீயா வளர்வதற்கு காரணியாகும்.
சுத்தமான குடிநீர்
மழை காலத்தில் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவது மழை காலத்தில் சகஜம். அதனால், சுத்தமான குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். கொதிக்க வைத்து வடிகட்டிய குடிநீரை அருந்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முக்கியம்
மழை காலத்தில் உணவு தொடர்பான தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். துரித உணவுகள், எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிட கூடாது. காய்கறி, கனிகள்,இறைச்சி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்து முக்கியம்
நோய் எதிர்ப்பு மண்டலம் சக்தியுடன் இருக்க வேண்டும். சரிவிகித உணவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க..
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )