ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவு வகைகள்.. உங்களுக்கான பரிந்துரை
இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது.
உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது. இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.
உலகில் 113 கோடி மக்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம். அதிலும், இந்த நோயை ஐந்தில் ஒருவர்தான் சரியாக கவனிக்கின்றனர் என்றும் மீதமுள்ளோர் கடும் அபாயத்தில் உள்ளதாகவும் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றனர்.
உயர் ரத்த அழுத்தமா.. உஷார்!
முன்பெல்லாம் வயதானவர்களிடம் சகஜமாக காணப்பட்ட இந்த நோய், தற்போது இளைஞர்களிடத்தில் கணிசமாக காணப்படுகிறது. குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, சுவாசிப்பதில் சிரமம், குறிப்பாக வேலை செய்யும் போது மூச்சுத் திணறல், மார்பு அசௌகரியம் மற்றும் எளிதில் சோர்வு போன்றவை உயர் இரத்த அழுத்தத்தின் சில பொதுவான அறிகுறிகள். இவற்றை நாம் எளிதாக நினைக்கக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடுவது மிகவும் ஆபத்தானது. இதனால் மாரடைப்பு, இதய செயலிழப்பு, அனியூரிசம், பக்கவாதம், நினைவாற்றல் பிரச்சனைகள், டிமென்ஷியா போன்றவற்றை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது கடுமையான நோய்களின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முக்கியமான படியாகும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நெஞ்சு வலி ஏற்படுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டவுடன் உடனடியாக சிகிச்சை எடுக்க முயற்சிக்கவும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது எதிர்கால வாழ்க்கையில் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இந்த நோய்க்கு சைலண்ட் கில்லர் எனும் பெயரும் உண்டு.
View this post on Instagram
உணவே மருந்து:
உணவே மருந்து என்று போதித்த திருமூலர் வழி வந்த நமக்கு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க நிறைய உணவுப் பழக்கவழக்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் ஆகியன உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தேவை. கீரை, லெட்டூஸ் ஆகியன இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாழைப்பழம்:
அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதில் உள்ள பொட்டாசியத்தை சீராக உடலுக்கு கொடுக்க இயலும். பழமாக அப்படியே சாப்பிட முடியாவிட்டால் அதை பால், கேக், ப்ரெட், ஸ்மூத்தி என ஏதாவது ஒரு வடிவில் உட்கொள்ளலாம்.
பீட் ரூட்:
இதில் உள்ளா நைட்ரேட் ரத்த நாளங்களை ரிலாக்ஸாக்க உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது.
வெள்ளைப் பூண்டு:
இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உள்ளது. மேலும், பூண்டு ரத்த நாளங்களை ரிலாக்ஸ் ஆக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )