Puneeth Rajkumar Death Cause: புனீத் மரணம்: உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? மருத்துவர் விளக்கம்!
Puneeth Rajkumar Death Reason: புனீத் ராஜ்குமார் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி செய்தவர்(isotropic exercise). அதில் அனைத்து உறுப்புகளின் அழுத்தங்களும் அதிகரிக்கும்.
கன்னட பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக புனீத் ராஜ்குமார் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். இருப்பினும் அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்றும், ஃபிட்டாக இருந்தாலும் மாரடைப்பு வருமா என்றும் பலரிடம் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவர் அருணகிரியிடம் ஏபிபி நாடு சார்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்புகள் இருக்கின்றன. உடற்பயிற்சி செய்வதில் மொத்தம் இரண்டு வகைகள் இருக்கின்றன. தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி, ஆக்சிஜனை உள்வாங்கும் உடற்பயிற்சி.
புனீத் ராஜ்குமார் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி செய்தவர்(isotropic exercise). அதில் அனைத்து உறுப்புகளின் அழுத்தங்களும் அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் ஆக்சிஜனை உள்வாங்கும் உடற்பயிற்சிகளைத்தான் மேற்கொள்ள வேண்டும் (cardiac exercise).
திடீர் மாரடைப்பு யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ரத்த ஓட்டம் இல்லாமல் இதயமானது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்வரை மட்டுமே தாங்கும். அந்த கால அளவை தாண்டினால் செல்கள் இறந்துபோகும்.
மன அழுத்தம் அதிகம் இருந்தால் உடலில் ஸ்டீராய்டு அதிகம் சுரக்கும். ஸ்டீராய்டு அதிகம் சுரந்தால் ரத்த நாளங்கள் சுருங்கிக்கொண்டே வரும். அப்போது உயிர் காக்கும் முக்கிய உறுப்புகளில் ரத்த அடைப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் அவரது உயிர் பிரிந்திருக்கும். தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Puneeth Rajkumar Health: கன்னட ‛பவர் ஸ்டார்’ புனீத் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்!
Puneeth Rajkumar Profile : மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )