Weight Loss : உடல் எடை குறைப்பில் செய்யக்கூடாத 3 தவறுகள்.. பிரபல ஊட்டச்சத்து நிபுணரின் முக்கிய அறிவுரை..
ருஜுதா திவேகர் பாலிவுட்டில் இந்த பெயர் மிகவும் பிரபலம். காரணம் சைஸ் ஜீரோ கரீனா கபூர் தொடங்கி அனில் அம்பானி வரை பலருக்கும் இவர் தான் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணர் (டயட்டீனிஸ்ட்) ஆவார்.
ருஜுதா திவேகர் பாலிவுட்டில் இந்த பெயர் மிகவும் பிரபலம். காரணம் சைஸ் ஜீரோ கரீனா கபூர் தொடங்கி அனில் அம்பானி வரை பலருக்கும் இவர் தான் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணர் (டயட்டீனிஸ்ட்) ஆவார். உடல் எடையைக் குறைக்க மக்கள் அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு வெயிட் லாஸ் புரோகிராம்களில் என்ரோல் செய்து கொள்கின்றனர். ஆனால் உடல் எடை குறைப்பை ஆரம்பிக்கும் முன்னர் மிக முக்கியமான மூன்று தவறுகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆண்டின் இறுதி காலத்தில் இருக்கிறோம் இது விழாக்காலம். கொண்டாட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் பஞ்சமிருக்காது. எல்லாம் முடிந்து புதுவருடம் பிறக்கும் முன்னர் பலரும் எடுக்கும் பெரும் சபதம் உடல் ஃபிட்னஸ் தான். அதனாலேயே உடல் எடையைக் குறைப்பதில் தேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் சொல்லும் டிப்ஸை பின்பற்றலாம்.
View this post on Instagram
1. இதுவே சரியான தருணம்:
இது குறித்து அவரே தனது இன்ஸ்டாகிராமில் சில டிப்ஸை வழங்கியுள்ளார். அந்த போஸ்டுக்கு அவர், இதுதான் சரியான தருணம். 2023ல் நீங்கள் அடைய விரும்ப முன்னேற்றத்திற்கு இந்த டிப்ஸ் தடையில்லாமல் இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2. வெயிட் லாஸை நம்பர் கேம் போல் அணுகுங்கள்
உடல் எடையை குறைப்பது என்பதை ஒரு எண் விளையாட்டு போல் அணுகுங்கள் என்று கூறுகிறார் ருஜுதா திவேகர். நீங்கள் உடல் எடையைக் குறைத்திருக்கிறீர்கள். ஆனால் கூடவே தூக்கம், பசி, மகிழ்ச்சி எல்லாம் குறைந்திருந்தால். அது உண்மையான குறைவு அல்ல. அதை இழப்பு என்றுதான் எடுக்க வேண்டும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுங்கள். அப்படியென்றால் சரியான சத்தான அளவான சாப்பாடு. சரியான போதுமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
3. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் சீரான தூக்கம் இல்லாமல் முற்றுபெறாது. அதனால் சுகாதாரமான சத்தான உணவுகளை உண்ணுங்கள். அப்படியென்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்யாமல் வீட்டில் சமைத்து உண்ணுங்கள். உடற்பயிற்சியை தவறவிடாதீர்கள். இந்த இரண்டும் இருந்தாலும் கூட சரியான ஓய்வை உடலுக்குக் கொடுங்கல்.
எளிமையான விஷயங்கள் உண்மையிலேயே கடைபிட்டிக்கா மிகவும் கடினமானவை. நீடித்த பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )