மேலும் அறிய

முதுகில் தொல்லை கொடுத்த சூடோமெனிங்கோசெல்.. அரியவகை கட்டி வெற்றிகரமாக அகற்றம் !

தண்டுவடத் திரவம் நிரம்பிய பெரிய கட்டியை அகற்றவும, அரிதான தண்டுவட அறுவைசிகிச்சை குறைபாட்டை சரிசெய்து சாதனை.

எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் 'சூடோமெனிங்கோசெல்' எனப்படும் கட்டியை அகற்றி, தண்டுவட உறையை சீரமைத்தனர்.

முதுகில் கடுமையான வலி

தென் தமிழகத்தின் முதன்மை மருத்துவ மையமாகப் புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள், 60 வயது மூதாட்டியின் கீழ் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்தி வந்த சூடோமெனிங்கோசெல் என அழைக்கப்படும் ஒரு பெரிய கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைப் பாதுகாக்கும் நிறமற்ற 'செரிப்ரோஸ்பைனல் திரவம்' (CSF) நிரம்பிய இந்த அசாதாரணமான கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு மருத்துவமனையில் செய்யப்பட்ட தண்டுவட அறுவைசிகிச்சையின் (L5-S1 discectomy) பக்கவிளைவாக இந்த பாதிப்பு உருவாகியிருக்கலாம் என்று என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டியூராபிளாஸ்டி

இந்த நோயாளிக்கு கீழ் தண்டுவடப் பகுதியில் (L4-L5 மற்றும் L5-S1) முற்றிய நிலையில் வட்டு தேய்மானமும் இருந்ததால், பாதிக்கப்பட்ட எலும்புகளை இணைத்து தண்டுவடத்தை நிலைப்படுத்தும் கூடுதல் சிகிச்சையையும் மருத்துவர்கள் வழங்கினர். தண்டுவட உறையில் ஏற்பட்ட கிழிசலைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் தண்டுவட திரவம் கசிவதைத் தடுக்கவும் 'டியூராபிளாஸ்டி' என்ற சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும், நீண்டகாலமாக இருந்த வீக்கத்தால் முதுகில் பெரிய தசைப் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் அருகில் உள்ள ஆரோக்கியமான சருமம் மற்றும் தசைகளை வைத்து அப்பகுதியை மூடி குணப்படுத்த 'லிம்பெர்க் ஃபிளாப்' என்ற சிறப்பு சிகிச்சையையும் மேற்கொண்டனர். இரண்டு வார மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, பாதிப்புகளிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபட்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்களில் அவர் தனது அன்றாடப் பணிகளை செய்யும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பது சிகிச்சையின் வெற்றிகர விளைவை சுட்டிக்காட்டுகிறது.

அரியவகை சிகிச்சை

இது குறித்து எலும்பியல் மற்றும் காய சிகிச்சை துறையின் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். வெற்றி நல்லதம்பி கூறுகையில், "முதுகில் வீக்கம், இரண்டு கால்களுக்கும் பரவும் கடுமையான முதுகுவலி மற்றும் படுக்கும்போது தலைசுற்றல் ஆகிய பாதிப்புகளுடன் நோயாளி எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார்.  இப்பாதிப்புகளால் தூக்கமின்மையோடு அன்றாடப் பணிகளையும் அவரால் செய்ய இயலாத நிலை இருந்தது. எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அவருக்கு சூடோமெனிங்கோசெல் கட்டி மற்றும் L4-L5, L5-S1 வட்டு தேய்மானம் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிக்கலான மறு-அறுவைசிகிச்சை தேவைப்படும் மிகவும் அரிதான மற்றும் சவாலான பாதிப்பு நிலையாகும். திரவம் நிரம்பிய அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி, தண்டுவட உறையைச் சீரமைத்து, இந்நோயாளிக்கு  நீண்டகாலமாக இருந்த வட்டுப் பிரச்னைக்கு தீர்வு கண்டோம். இதன் மூலம் தோல்வியடைந்த முந்தைய அறுவைசிகிச்சையின் குறைபாட்டை சரிசெய்து நோயாளியை குணப்படுத்தியதில் நாங்கள் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்." என்றார். 

தசைப் பற்றாக்குறை

பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் பி. சுரேஷ் குமார் கூறுகையில், "எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் கட்டியை அகற்றிய பிறகு, அங்கு ஏற்பட்ட தசைப் பற்றாக்குறையைச் சரிசெய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். நீண்டகாலமாக இந்தப் பிரச்சனை இருந்ததால், முதுகில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகி சருமம் மற்றும் திசுக்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரோக்கியமான சருமத்தின் மூலம்  அப்பகுதியை மூடி, காயத்தை முழுமையாகக் குணப்படுத்த மடல் மறுகட்டமைப்பு செயல்முறை என்ற பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை முறையை நாங்கள் கையாண்டோம்," என்றார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget