மேலும் அறிய

MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

2021-ம் தேர்தலில் சேலத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2021-ம் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம் என சேலம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்க்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் சேலத்தில் இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டனர். 

அந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, சேலம் மலைகளின் மாவட்டம் என்பார்கள். ஆனால் இங்கு மகளிரால் நிரம்பியுள்ளது.மகளிர் எல்லோரும் பயர் ஆக இருக்கிறார்கள்.  சேலம் என்றால் ஸ்டீல் என்பார்கள். ஸ்டாலின் என்பதற்கும் ஸ்டீல் என்றுதான் அர்த்தம். கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசில் 129 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம், வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம், கருப்பூரில் மினி டைடல் பூங்கா, சேலம், மேட்டூர் ஆத்தூரில் அறிவுசார் மையங்கள், அம்மாபேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனை, மேட்டூர் எடப்பாடியில் புதிய பேருந்துநிலையம், கருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், எடப்பாடி சங்ககிரியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது .விடியல் பயணத் திட்டத்தில் மாதம் ரூ.800 முதல் ரூ.900 வரை பெண்கள் மிச்சப்படுத்துகிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். மிச்சமாகும் பணத்தில் தாங்கள் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடுவதாக பெண்கள் சொல்லி உள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள், மற்றவர்களுக்காக தாங்கள் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்காதீர்கள். நீங்களும் சாப்பிட்டு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடும் ஸ்ட்ராங்காக இருக்கும்.


பெண்களை மையப்படுத்தியே திமுக அரசு செயல்பட்டு வருகிறது .எங்களை பார்த்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரும் போது திமுக சதி செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 33 சதவீத இட ஒதுக்கீடு என்று எடப்பாடிக்கு தெரிவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளில் திமுக செயல்படுத்தியுள்ளது. அதை மேலும் உயர்த்தி,உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். சட்டமன்ற, பாராளுமன்றத்தில் இந்த நிலை கொண்டு வர வலியுறுத்தி வருகிறோம். பாஜக நினைத்தால் எப்போது கொண்டு வந்திருக்கலாம். ஆனால் தேவையில்லாம் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை என்பதை கொண்டு வந்து மகளிர் இட ஒதுக்கீடு நடக்க கூடாது என பாரதிய ஜனதாக் கட்சி தடுக்க நினைக்கிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

தொகுதி வரையறையைத்தான் எதிர்க்கிறோம். தமிழ்நாடே கொதித்து  போயுள்ளது. தமிழ்நாட்டில் அனைவரும் கருப்பு கொடி ஏற்றப் போகிறோம். பாஜகவின் அலங்கோல சட்டத்திற்கு கோலங்கள் மூலம் பெண்கள் எதிர்க்கப் போகிறார்கள். இதில் அரசியல் வேறுபாட்டிற்கு இடமில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஆபத்து சூழ்ந்துள்ளது . எடப்பாடி பழனிசாமிக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. எக்குக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்து விட்டு ஏன் இப்படி டெல்லிக்கு முதுகு வளைந்து போய் விட்டார். கேரளா, தெலுங்கானாவில் கட்சி வேறுபாடின்றி எதிர்க்கிறார்கள் . தமிழனாக பிறந்து இப்படி துரோகம் செய்யலாமா உங்கள் துரோகத்திற்கு தண்டனை மே 4 தேதி கிடைக்கும்.

கடந்த 2021-ம் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதைப் போலவே பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் வழங்க வேண்டும என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget