மேலும் அறிய

Hair Loss : எடை குறைக்கும்போது, முடியும் கொத்து கொத்தா கொட்டுதா? இதைப் படிங்க முதல்ல..

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் விரைவாக உடல் எடையை குறைக்க முடிந்தவரை குறைவாக சாப்பிட முயற்சி செய்கிறார்கள்

நம் தலைமுடி உதிர்வுக்கு என்ன காரணம்? தட்பவெப்பம், நமது உடல்நிலை, தலை வறட்சி என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிக முடி உதிர்தல் ஊட்டச்சத்து குறைபாடுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின்படி, ஒரு நாளைக்கு சுமார் 50-100 முடிகள் உதிர்வது இயல்பானது. இது முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், முடி உதிர்வு நூற்றுக்கு மேல் இருக்கும்போது கவலைகொள்ள வேண்டியதாகிறது. முடி உதிர்தலுக்கான பல காரணங்களில் ஒன்று, ஊட்டச்சத்து குறைபாடு. ஊட்டச்சத்து குறைபாடு முடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்து குறைபாடு டிப்ஸ்கள்  நம்மை தவறாக வழிநடத்துபவையாக இருக்கின்றன. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் விரைவாக உடல் எடையை குறைக்க முடிந்தவரை குறைவாக சாப்பிட முயற்சி செய்கிறார்கள்.எனவே, அவர்கள் தங்கள் உணவில் இருந்து அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு, நெய், வாழைப்பழம் போன்றவற்றை உணவு நிபுணரிடம் கூட ஆலோசிக்காமல் தவிர்க்கிறார்கள். இது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது, நம் முடி ஆரோக்கியத்தையும் இது பாதிக்கிறது.

 கெட்டோ, டிடாக்ஸ், இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் போன்ற உட்கொள்ளல் நமது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது. "இதன் விளைவாக உடலுக்கு போதுமான மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது, இதனால் முடி உதிர்தல் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். புரதத்தை இழப்பது கெரட்டின் உற்பத்தியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து இடைவெளி பெரும்பாலும் உடலில் உள்ள அமினோ அமிலத்தின் உள்ளடக்கத்தை பாதிக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும், இது முடி வளர்ச்சிக்கு கெரட்டின் உற்பத்திக்கு அவசியம். எனவே, போதிய புரதம் இல்லாத குறைந்த கலோரி உணவை உட்கொள்ளும்போது அதிக முடி இழப்பு ஏற்படும். 

மேலும் கட்டுப்பாடான உணவு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. உணவில் இரும்பு, துத்தநாகம், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் முடி ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் குறைபாடு நேரடியாக முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. சில கூடுதல் பவுண்டுகளை குறைக்கும் அதே வேளையில், ஊட்டமளிக்கும், வலுவான முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். 

எடை இழப்பு மற்றும் தலைமுடி ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 

1. நீரேற்றத்துடன் வைத்திருங்கள்: உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியம். இது எடை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, வலுவான முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

2. புரதத்தைச் சேர்க்கவும்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் நல்ல அளவு புரதத்தைச் சேர்க்கவும். உங்கள் எடை இழப்புக்கு புரதம் ஏற்றது என்பது மட்டுமல்லாமல் முடி வேர்களில் கெரட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.

3. சீசனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்: கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.அவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

4. உடனடி எடைக்குறைப்பைத் தவிர்க்கவும்: உடல் எடையை குறைப்பது என்பது ஒரு தவம் போன்றது பொறுமையாக அடைய வேண்டிய இலக்கு. ஆனால் அதனை துரிதப்படுத்துவது உடலின் மெட்டபாலிஸத்தை பாதிக்கிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Embed widget