மேலும் அறிய

மக்களை அச்சுறுத்தும் கல்லீரல் புற்றுநோய்: சர்வதேச அளவில் நிலவரம் என்ன?

எல்செவியர் வெளியிட்ட ஹெபடாலஜி இதழில் புதிய ஆய்வில் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களில் முதன்மை கல்லீரல் புற்றுநோய் இருந்தது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து மேலும் 2040ம் ஆண்டிற்குள் முதன்மை கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. எல்செவியர் வெளியிட்ட ஹெபடாலஜி இதழில் புதிய ஆய்வில் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் "புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உலகளாவிய புற்றுநோய் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் இறப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், கல்லீரல் புற்றுநோய் தொடர்பான புதிய மதிப்பீடுகளை வழங்கவும், தேசிய கல்லீரல் புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான அத்தியாவசிய கருவியை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்" என்று இதழின் ஆசிரியர் ஹாரியட் ரம்கே விளக்கியுள்ளார். இவர் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட மாணவராக இருக்கிறார்.

மக்களை அச்சுறுத்தும் கல்லீரல் புற்றுநோய்: சர்வதேச அளவில் நிலவரம் என்ன?

"இந்தப் ஆய்வில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் இறப்புகளுக்கான வரிசையில் கல்லீரல் புற்றுநோய் எந்த இடத்தில் உள்ளது என்பதை நாங்கள் விவரிக்கிறோம். 2040ம் ஆண்டுக்கான எதிர்கால கல்லீரல் புற்றுநோய் தாக்கத்தைப் பற்றிய கணிப்புகளையும் நாங்கள் முன்வைக்கிறோம்," என்று ஆசிரியர் மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டில் 8.3 லட்சத்திற்கும் அதிகமான கல்லீரல் புற்றுநோய் இறப்புகள் பதிவாகியுள்ளன. உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் 36 வகையான புற்றுநோய்கள் எவ்வளவு பாதித்திருக்கிறது மற்றும் அதன் இறப்பு மதிப்பீடுகளை தயாரிக்கும் GLOBOCAN 2020 தரவுத்தளத்தின் ஆராய்ச்சிக்கான சர்வதேச ஏஜென்சியிடமிருந்து இந்த முதன்மை கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் பற்றிய தரவை ஆய்வாளர்கள் பிரித்தெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட மக்கள்தொகை கணிப்புகளைப் பயன்படுத்தி 2040 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பரவல் அல்லது இறப்பு எண்ணிக்கையில் கணிக்கப்பட்ட மாற்றம்  மதிப்பிடப்பட்டது. 2020ம் ஆண்டில், 9,05,700 நபர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளவில் 8,30,200 பேர் கல்லீரல் புற்றுநோயால் இறந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளின்படி, கல்லீரல் புற்றுநோய் இப்போது 46 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களில் ஒன்றாகும், மேலும் பல உயர் பொருளாதார நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் ஐந்து காரணங்களில் ஒன்றாகவும் உள்ளது. கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்த கணிப்பின்படி அதிகமாக இருந்தது. 

தற்போதைய விகிதங்கள் மாறாது என்று கருதி, அடுத்த 20 ஆண்டுகளில் கல்லீரல் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் ஆண்டு எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கணிக்கப்பட்ட கேஸ்களின் அதிகரிப்பு கல்லீரல் புற்றுநோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Embed widget