மேலும் அறிய

IBS : சாப்பிட்ட உடன் பாத்ரூமுக்கு போயிடுறீங்களா? உங்கள் IBS தொந்தரவு இருக்கலாம்.. டாக்டர் சொல்றதை கேளுங்க..

Irritable Bowel Syndrome: இரிட்டபல் பவல் சின்ட்ரோம் நோய் உருவாவதற்கான காரணங்களை தீர்வுகளையும் இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தரமில்லாத உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட உணவுகள் முதலில் நமது வயிற்றில்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறு, மலச்சிக்கல், சாப்பிட்ட உடனே மலம் கழிப்பது என ஆரம்பிக்கும் இந்த பிரச்னைகள் ஒரு கட்டத்தில் இரிட்டபல் பவல் சின்ட்ரோமாக மாறுகிறதாம். இந்த நோயை தோற்றுவிப்பதில் மன அழுத்தத்திற்கும் அதிக பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் இரிட்டபல் பவல் சின்ட்ரோம் எப்படியான நோய்.. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம்  கேட்டேன்.

IBS : சாப்பிட்ட உடன் பாத்ரூமுக்கு போயிடுறீங்களா? உங்கள் IBS தொந்தரவு இருக்கலாம்.. டாக்டர் சொல்றதை கேளுங்க..

இது குறித்து அவர் பேசியதாவது. 

இரிட்டபல் பவல் சின்ட்ரோம் பெருங்குடலில் வரக்கூடிய ஒரு பிரச்னை. இது பெருங்குடலில் இருக்கும் திசுக்களை பெரிதளவில் பாதிக்காது. இவை மனநல பிரச்னைகள் காரணமாகவும் ஏற்படுகிறது. உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே இதை குணப்படுத்தி விட முடியும். நவீன மருத்துவத்தில் ப்ரோ பயாட்டிக் முறையில் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது நலம் பயக்கும் நுண்ணுயிரிகளை எடுத்துக்கொள்வது.  

இரிட்டபல் பவல் சின்ட்ரோம் வருவதற்கான காரணங்கள்: 

இரிட்டபல் பவல் சின்ட்ரோம் என்பது நபர்களை பொறுத்து மாறுபடும். காரணம் இதில் பேதி, மலக்கட்டு, வயிற்றுப் பொருமல், செரியாமை உள்ளிட்ட பல அறிகுறிகள் தென்படும். இது போன்ற அறிகுறிகளுக்கு ஆரம்பக்கட்ட மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும், அவை சரியாகமால் தொடரும் போது அதை இரிட்டபல் பவல் சின்ட்ரோமா என்பதை சோதனை செய்ய வேண்டும். இது தவிர குடல் அழற்சி உள்ளிட்ட நோய்கள் வயிற்றுக்குள் இருக்கிறதா என்பது குறித்து இரத்த பரிசோதனைகள் செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.


IBS : சாப்பிட்ட உடன் பாத்ரூமுக்கு போயிடுறீங்களா? உங்கள் IBS தொந்தரவு இருக்கலாம்.. டாக்டர் சொல்றதை கேளுங்க..

அதேபோல மன அழுத்தத்திற்கும் இதற்கும் அதிக தொடர்பு இருக்கிறது. அதிகப்படியான மன அழுத்தம் இந்த நோய்களுக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது. இவைதவிர நமது வாழ்க்கை முறையில் பாரம்பரியமாக இருந்து வந்த, 6 மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முறை இல்லாமல் போனதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

1. நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

2. 6 மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு கழிவுகளை நீக்க வேண்டும். 

3. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

4.  பழைய சோறு, மோர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

5.  மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

6. சீரகம், சோம்பு, அன்னாசிப்பூ போன்ற அஞ்சறை பெட்டி சார்ந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget