Breast Cancer: மார்பக புற்றுநோய் குறித்து பயமா? அறிகுறிகளை அறிய வீட்டிலேயே சுய பரிசோதனை செய்துகொள்ள முடியும்...
பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கம் உள்ளதா என அறிய அறிகுறிகளை வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும்.
சமீபத்திய காலங்களில் மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இது உலகளவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். ஆய்வுகளின்படி, கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இளம் வயதிலேயே அதிக சதவீத பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காக்க மார்பக புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய வேண்டியது அவசியம்.
ஒருவருடைய மார்பகம் இயல்பாக உள்ளதா என கண்டறிய வேண்டும். மார்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளும் போது, மார்பகம், மார்பக காம்பு, அல்லது அக்குள்களில் சிறிய மாற்றங்கள் தென்பட்டால் கூட தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்.மார்பக பகுதிகளில் ஒரு சிறிய கட்டியிலிருந்து தொடர்ந்து மார்பக காம்பு வெளியே துருத்துதல், மார்பகம் தடித்தல், தோல் மங்குதல் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றி எரிச்சல் ஆகிய பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
இது 2023-ஆம் ஆண்டின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், பெண்களுக்கு ஏற்படும் நோய் தாக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆபத்து காரணிகள், அறிகுறிகள் மற்றும் வழக்கமான சுய பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய அறிவை அவர்களுக்குக் கற்பிப்பது மிகவும் முக்கியமானது.
மார்பக புற்றுநோயை கண்டறிய சுய பரிசோதனை குறிப்புகள்
சுய பரிசோதனைகள் எளிமையானவை, செலவு குறைந்தவை. சுய பரிசோதனையை ஒருவர் வீட்டிலேயே தானாக செய்துகொள்ள முடியும். இந்த சுய பரிசோதனை முறை சாதாரண தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், உணரவும், மாற்றங்கள் அல்லது அசாதாரணங்களை விரைவாக கண்டறியவும் பெண்களுக்கு உதவும். இதன் மூலம் ஏதேனும் கட்டி, அளவு அல்லது வடிவத்தில் மாற்றங்கள், தோலின் மங்கல், வெளியேற்றம், தலைகீழ் அல்லது மார்பகத்தில் ஏதேனும் விவரிக்க முடியாத வலி ஆகியவை அடங்கும்.
இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால், விரைவில் மருத்துவரை அணுகி சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மார்பக புற்றுநோயின் ஆபத்து காரணிகள்
மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து காரணிகளைத் தீர்மானிக்கும்போது, நீங்கள் வயதாகும்போது வாய்ப்புகள் அதிகரிக்கும். வேறு சில காரணிகளாவன, 12 வயதிற்கு முன் பூப்படைதல், குழந்தை பிறக்காமல் இருப்பது, 55 வயதிற்குப் பிறகு மாதவிடாய் நிறுத்தம், நீண்ட காலமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது அல்லது குடும்பத்தில் மார்பக புற்றுநோய் இருப்பது ஆகியவை அடங்கும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, வயது, மரபணு மாற்றங்கள், அடர்த்தியான மார்பகங்கள்,அல்லது புற்றுநோய் அல்லாத பிற மார்பக நோய்கள் மற்றும் சில மருந்துகளின் வெளிப்பாடு போன்ற காரணிகளும் உள்ளன. மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்க ஒருவர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )