Health Tips: பெண்களை குறிவைக்கும் ஆபத்து..! தாய்மார்கள் செய்ய தவறுபவை - உடல்நலம் என்ன ஆகும் தெரியுமா?
Health Tips For Women: பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படும் உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Health Tips For Women: பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படும் 3 முக்கிய உடல்நலப் பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உடல்நல ஆலோசனைகள்:
பெண்கள் தங்களின் பரபரப்பான வாழ்க்கை முறையில், சில சமயங்களில் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் முழு குடும்பமும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், பெண்களின் அன்றாட வாழ்க்கை மோசமாகி வருவது மட்டுமின்றி, உடலிலும் பல மாற்றங்கள் தென்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் பல நோய்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட நாள் சிகிச்சைக்கும் ஆளாக வேண்டி இருக்கும். இந்த சூழலில், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் என்னென்ன நோய்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து இங்கே அறியலாம்.
திடீர் எடை அதிகரிப்பு
மாறிவரும் வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுகளாலும் பெண்கள் உடல் பருமனாகி வருகின்றனர். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள், பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது. உடற்பயிற்சியின்மையால் பெண்களின் உடல் பருமன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனுடன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் கூடும். எனவே, தினமும் தங்களது ஆரோக்கியத்திற்கு எனவும் சிறிது நேரத்தை பெண்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும்.
ஹார்மோன் பிரச்சனைகள்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பெண்களின் ஹார்மோன்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், தூங்காமல் இருப்பதும் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். குறிப்பாக பேறுகாலத்தில் உறக்கமின்மை மற்றும் நேரத்திற்கு சாப்பிடாதது போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, ஒழுங்கற்ற மாதவிடாய், பிசிஓஎஸ் போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர். மேலும், அதன் தாக்கம் பெண்களின் கருவுறுதல் மற்றும் அவர்களின் தோலில் காணப்படுகிறது. எனவே, பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியிலும் போதுமான உறக்கம், நேரத்திற்கு உணவு என்பது அவசியமாகும்.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு:
இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் நிர்வகிக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக சில சமயங்களில் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தாமல் அதிக பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனுடன், அவர்களின் உடலுக்கு நல்ல தூக்கம் தேவைப்படுகிறது, அதை அவர்களால் நிறைவேற்ற முடியாது. இந்த நோய்களில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். கணவரிடம் வேலைபளுவை எடுத்துச்சொல்லி, வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமான பணிச்சுமையை ஏற்றுக்கொள்வதை தவிர்க்க முயலுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )