‛கொஞ்ச நாள் ஆகட்டும்...’ குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா? கவனமா படிங்க!
பெண்களின் உடல், வயதான காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு கார்போஹைட்ரேட்டின் அளவினைக் குறைத்துக் கொண்டு நியூட்ரிசன் அளவினை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்படுவதால், அந்த வயதில் குழந்தைப்பெற்றுக்கொள்ள முயலும் போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெண் தன்னுடைய வாழ்வில் கருத்தரிக்கிறார் என்றால் அது அவர்களுக்கு மட்டுமில்லை அவற்றைச் சுற்றியுள்ள அனைத்து உறவுகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அற்புதத் தருணம். குறிப்பாக தாய் வயிற்றில் குழந்தைகள் கருத்தரிப்பது என்பது தானாகவே நடக்கும் ஒருவிதமான அறிவியல் ரீதியான ஒரு நிகழ்வு. ஆனால் இன்றைய சமூகத்தினர் அதனையே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என்று தான் கூறவேண்டும். ஒருவர் திருமணம் முடிந்தப்பிறகும், வாழ்வில் முன்னேற்றத்தினைச் சந்திக்க வேண்டும் எனவும் தனக்கான அனைத்து லட்சியங்களை அடைந்த பிறகு தான் குழந்தையினைப்பெற்றெடுக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு குழந்தைப்பிறப்பினை ஒத்திவைக்கின்றனர். சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கருத்தரித்தாலும் அதனைக் கலைப்பதற்கு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையிலும் உள்ளனர். இதுப்போன்று மேற்கொள்வதால் அவர்கள் வாழ்வில் என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள்? என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பெண்கள் 30 வயதிற்கு மேல் கருத்தரித்தால் என்ன பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்?
இன்றையக் காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்வதற்கு தாமதம் ஆகின்றது. மேலும் திருமணத்திற்குப் பிறகு குழந்தைப்பிறப்பினை தாமதப்படுத்திக்கொள்ளலாம் எனவும் முடிவு எடுக்கின்றனர். இதோடு பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் இரண்டாவது திருமணம் என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாகவே குழந்தைப்பிறப்பு தாமதாமாகின்றது. குறிப்பாக தற்போது மருத்துவமனைக்கு 30 வயதாகின்ற 70 சதவீத பெண்கள் குழந்தைப்பிறப்பிற்காக மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் 30 வயதிற்கு மேல் ஒரு பெண் கருத்தரிக்கிறார் என்றால் அது நிச்சயம் பாதிப்பினைத்தான் ஏற்படுத்தும். குறிப்பாக 30 வயதிற்கு மேலான பெண்களுக்கு மரபணு குறைபாடு அதிகம் ஏற்படுவதால் அவர்கள் அந்த வயதில் குழந்தையினைப் பெற்றெடுக்கும் போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவிலுள்ள உள்ள பெண்கள் 35 வயதிற்கு மேல் பிரசவிப்பதால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து இந்தியாவில் உள்ள பெண்களின் உடல்நிலையை மற்ற நாட்டு பெண்களுடன் ஓப்பிடும் போது அங்குள்ள பெண்கள் 37 வயதில் சந்திக்கும் பிரச்சனைகளை இந்தியப்பெண்கள் 30 வயதிலேயே சந்திக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.
பெண்கள் கருத்தரிக்கத் தாமதம் ஆவது ஏன்? காரணம் என்ன ?
பெண்கள் கருத்தரிப்பு தாமதம் ஆவதற்கு உணவுப்பழக்கமும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களது உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவர்கள் கருத்தரித்து விட்டால் தற்போது குழந்தை தேவையில்லை என அதனைக் கலைப்பதற்கு மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்கள் கருவினை கலைத்தப்பிறகு பல ஆண்டுகளுக்கு கருத்தரிப்பே இல்லாமல் போய் விடுகிறது. இதனால் தற்போது குழந்தை வேண்டாம் என்று நினைத்தால் கருத்தடைக்காக உள்ள மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை மருத்துவர்களின் அறிவுரையின் படி தான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் தற்போது பல பெண்கள் பிரகனன்சி கிட் மூலம் வீட்டிலேயே கருத்தரிப்பினை உறுதி செய்துவிட்டநிலையில், இதனைக்கலைப்பதற்கு மெடிக்கலில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இச்செயல் பெரிய தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் பிரகனன்சி கிட் மூலம் கன்பார்ம் செய்தாலும் கரு, பெண்ணின் கருப்பைக்குள் தான் இருக்கிறதா? என்பதை முதலில் ஸ்கேன் செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது அவர்களின் உயிர்க்குக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு பெண்களுக்கும் 30 வயதிற்கு மேல் பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அவர்களது உடலில் ஹார்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் சர்க்கரை நோயினால் அவர்கள் பாதிப்படைய நேரிடுகிறது. இதோடு பல பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படுகிறது. எனவே இதுப்போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் பெண்களின் உடல் வயதான காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு கார்போஹைட்ரேட்டின் அளவினைக்குறைத்துக் கொண்டு நியூட்ரிசன் அளவினை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு நம் உடலை ஆரம்பத்தில் இருந்தே பிட்னஸாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் நாம் சந்திக்க நேரிடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )