மேலும் அறிய

மயிலாடுதுறை: இன்று பூஜ்ஜியமாக பதிவானது கொரோனா தொற்று எண்ணிக்கை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கும் கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்படாததை அடுத்து, தொற்றின் எண்ணிக்கை 26,498 ஆக தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


மயிலாடுதுறை: இன்று பூஜ்ஜியமாக பதிவானது கொரோனா தொற்று எண்ணிக்கை...

முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அறிமுகம் ஆகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக வல்லரசு நாடுகளுக்கே பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38-வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 26 ஆயிரத்து 498 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 26 ஆயிரத்து 167 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று  மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்படவில்லை.  மேலும் மாவட்டத்தில்  தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுவரை மாவட்டத்தில் 330 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 


மயிலாடுதுறை: இன்று பூஜ்ஜியமாக பதிவானது கொரோனா தொற்று எண்ணிக்கை...

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் நாடு முழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  22 லட்சத்து  14 ஆயிரத்து  875  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

முதல் தவணை தடுப்பூசியும் 12 லட்சம் 25 ஆயிரத்து 701 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 79 ஆயிரத்து 247 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 9 ஆயிரத்து  927  பேருக்கு செலுத்தியுள்ளனர்.  இதில் ஆண்கள் 10 லட்சத்து 36 ஆயிரத்து 930 பேரும், பெண்கள் 11 லட்சத்து 67 ஆயிரத்து 582 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  436 பேரும்  தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இதில் கோவாக்சின் 2 லட்சத்து  88  ஆயிரத்து  22 பேருக்கும்,  கோவிஷீல்ட்  18 லட்சத்து 77 ஆயிரத்து 991 பேருக்கும்  போடப்பட்டுள்ளது.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget