தூக்கத்துல அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கப் போய்ட்டு இருக்கீங்களா? இதை படிங்க முதல்ல..
இந்த தொந்தரவுக்கும் உங்கள் சீரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உங்களுக்கு மலம் கழிக்கும் சிக்கல்கள் இருப்பின், இந்த தொந்தரவும் கூடவே இருப்பதில் ஆச்சரியம் இல்லை
இரவில் தூங்கும்போது, பல முறை சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு ஏற்படுகின்றதா? உங்களது உடலில் இந்த சத்து குறைவாக இருக்கலாம்.
தூக்கம் அசத்தும்போது, படுக்கையை விட்டு எழுந்து கொண்டே இருப்பது நிச்சயம் எரிச்சலான விஷயம்தான். உங்களது தூக்கத்தின் நடுவே பல முறை சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருந்தால், உங்களுக்கு நாக்டூரியா என்று அழைக்கப்படும் பிரச்சனை இருக்கலாம். இது அதிகம் பேருக்கு இருக்கும் தொந்தரவு தான், வயதாக ஆக இது அதிகரிக்கும்.
இந்த தொந்தரவுக்கும் உங்கள் ஜீரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உங்களுக்கு மலம் கழிக்கும் சிக்கல்கள் இருப்பின், இந்த தொந்தரவும் கூடவே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், குடலில் அடைத்து இருக்கும் மலக்கழிவுகள் சிறுநீர் அறையைத் தொடர்ச்சியாக அழுத்துவது சிறுநீர் கழிக்கும் நிர்பந்தத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆகையால், மல சிக்கல்களைத் தீர்ப்பது இந்த தொந்தரவையும் குறைக்கும்.
நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது தான் இதன் தீர்வாகும். நார்ச்சத்துகள் ஜீரணக் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் அரும் உதவி புரிகின்றன. மல சிக்கல்கள் குறைந்த பின்னர், சிறுநீர் பை அழுத்தம் தானாகவே சீராகும், சிறுநீர் கழிக்கும் உந்துதலும் குறையும்.
நார்ச்சத்து நிரம்பியுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ஜீரணத்திற்கு மட்டும் உதவக் கூடிய விஷயமல்ல. அவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உடலின் இன்சுலின் செயல்பாட்டை உறுதிபடுத்தும்.
மேலும், பகலில் உடலுக்குத் தேவையான நீர் அருந்துவது, சமகால அளவுகளில் சிறுநீர் கழிப்பது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உந்துதலைக் குறைக்கின்றன.
அதிக நாச்சத்து நிரம்பியுள்ள உணவுகள் – ஒட்ஸ், கினோவா, கொட்டைகள், பார்லி, பருப்புகள், பீன்ஸ், ஆப்பிள்கள், வாழைப்பழங்கள்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்