வட தமிழ்நாடு கொரோனா நிலவரம்: 8 மாவட்டங்களின் நிலை என்ன?
இன்றைய நிலவரப்படி வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5006 ஆக உள்ளது .
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 939 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை , 1083 ஆக உள்ளது , மேலும் வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு பலனின்றி இறந்து போனவர்களின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது . இன்றைய நிலவரப்படி இந்த 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5006 ஆக உள்ளது .
தடுப்பூசிகள் நிலவரம் என்ன ?
கொரோனா தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் , கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ் நாடு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது .
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்ட நிலையில் . தற்பொழுது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போடும் பனி சுகாதார துறையால் தீவிரப்படுத்தப்பட்டு , நேற்றுவரை 23 .06 .2021 வரை கொரோனா முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 24 .17 கோடியை கடந்துள்ளது . இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 .7 சதவீதமாகும் . இதேபோல் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 .16 கோடியாக உயர்ந்துள்ளது . இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 .8 சதவீதமாகும் . வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் தடுப்பூசிகளுக்கு நாளுக்கு நாள் சிறப்பு தடுப்பூசி மையங்கள் மாறுபட்டாலும் . நிரந்தரமாக 11 தடுப்பூசி மையங்கள் செயல் பட்டுவருகின்றன .
இதில் வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள ஹோலி கிராஸ் பள்ளி சத்துவாச்சாரியிலும் , காட்பாடி டான் போஸ்கோ பள்ளியிலும் , வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும் , ஜெயின் சங்கம் சார்பில் ஜெயரம்செட்டி தெருவிலும் நிரந்தர தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றது .
இதே போல் அணைக்கட்டு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் , கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , கே வி குப்பம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திலும் , குடியாத்தம் பகுதியில் சந்தைப்பேட்டை சமுதாய கூடத்திலும் , சரஸ்வதி வித்யாலயா பள்ளியிலும் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலை பள்ளி என குடியத்தில் மூன்று இடங்களிலும் , பேர்ணாம்பட்டு பகுதியில் இஸ்லாமிய உயர் நிலை பள்ளியிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த பட்டு வருகின்றது .
இந்த 11 மையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என 31 தடுப்பூசி மையங்களில் , நாள் ஒன்றுக்கு 5000 நபர்கள் என இதுவரை 2 .85 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இது வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய மொத்த மக்கள் தொகையில் 25 .55 சதவீதமாகும் .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )