TN Corona Update: தமிழ்நாட்டில் மேலும் 1,288 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி..
TNCoronaUpdate: தமிழ்நாட்டில் மேலும் 1,288 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
TNCoronaUpdate:
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக மேலும் 1,288 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 1,691 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 03 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 3, 2022
• TN - 1,288
• Total Cases - 35,48,195
• Today's Discharged - 1,691
• Today's Deaths - 01
• Today's Tests - 31,196
• Chennai - 283#TNCoronaUpdates #COVID19India
தமிழ்நாடு- கொரோனா பாதிப்பு விவரம்:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,48,195 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,98,770 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 பேர் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட நிலவரம்
சென்னையில், 283 பேருக்கும், செங்கல்பட்டு 115 பேருக்கும், கோவையில் 138 பேருக்கும், ஈரோடில் 64 பேருக்கும், சேலத்தில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 48 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 36 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 3, 2022
Chennai Total Cases - 7,83,525
03Aug: 283
02Aug: 298
01Aug: 309
31July: 316
30July: 345
29July: 353
28July: 368
27July: 396
26July: 409
25July: 415
24July: 419
23July: 431
22July: 466
21July: 516
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 26 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.8 (6,82,33,754) கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுக்காக்க...
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்கவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து பூரணமாக மீளும் வரை நாம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். ஒன்றிணைவோம்; கொரோனாவை வெல்வோம்.
கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருத்துங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா நம்மை தாக்கமால் பாதுக்காக்க தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி உடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுகொள்ளுங்கள். தடுப்பூசி போட்டு கொண்ட ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கே இரண்டு முறைக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவு இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் தொற்று நம்மை அண்டாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்