மேலும் அறிய

Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் 4230 புதிய பாதிப்புகள்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Corona LIVE Updates July 2nd 2021 Covid19 Lockdown Guidelines Announcement Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில்  4230 புதிய பாதிப்புகள்
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

19:21 PM (IST)  •  02 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 4230 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,810 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,230 ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 992 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 238 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 238 ஆக உள்ளது.

கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 74 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 30, கோவை, புதுக்கோட்டையில் தலா 7, சென்னையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 18 பேர் உயிரிழந்தனர். 

18:51 PM (IST)  •  02 Jul 2021

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு ஒப்புதல்

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  கோவின் இணையதளம், தடுப்பூசி மையங்கள் மூலம் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:40 PM (IST)  •  02 Jul 2021

கொரோனா 2ஆம் அலை இன்னும் ஓயவில்லை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை. ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

16:41 PM (IST)  •  02 Jul 2021

கேரளா உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு - மத்தியக் குழு விரைந்தது

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

15:45 PM (IST)  •  02 Jul 2021

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர தமிழ்நாடு அரசு முடிவு?

தமிழ்நாட்டில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தரவும், கொரோனா தொற்று குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தரவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Slams: ஒரு ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ஒரு ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams: ஒரு ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ஒரு ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Embed widget