மேலும் அறிய

Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Corona LIVE Updates 16th July 2021 India Corona Cases Recoveries Vaccination Second wave TN Hospitals COVID-19 Situation Delta variant Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

21:37 PM (IST)  •  16 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 312 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,48,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,312ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  31 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 902 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 144 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 144 ஆக உள்ளது.

கோவை 252, ஈரோடு 152, தஞ்சை 158, சேலம் 168, திருப்பூர் 138, செங்கல்பட்டு 127, கடலூர் 83, திருச்சி 84, திருவண்ணாமலை 91, நீலகிரி 58, நாமக்கல் 69, கள்ளக்குறிச்சி 70, திருவள்ளூர் 71, கன்னியாகுமரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 7 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8286 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 7 பேர், கோவை, கடலூர், திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு  பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,230 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,68,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

19:35 PM (IST)  •  16 Jul 2021

தமிழ்நாட்டில் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12:31 PM (IST)  •  16 Jul 2021

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது

கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

11:25 AM (IST)  •  16 Jul 2021

கொரோனா 3-வது அலை: ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன்  இன்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலந்துரையாடிகிறார். கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 23,000 கோடி தொகுப்பிற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

11:10 AM (IST)  •  16 Jul 2021

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நிலவரம்

VACCINE DOSES

(As on 16 July 2021)

SUPPLIED

41,10,38,530

IN PIPELINE

52,90,640

CONSUMPTION

38,58,75,958

BALANCE AVAILABLE

2,51,62,572

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 41 கோடி (41,10,38,530) தடுப்பூசிகள்  வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்  வீணானது உட்பட இன்று காலை 8 மணி வரை , 38,58,75,958டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  2.51 கோடிக்கு மேற்பட்ட  (2,51,62,572) தடுப்பூசி டோஸ்கள், கையிருப்பில் உள்ளன.

வரும் நாட்களில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேலும் 52,90,640 கொரோனா தடுப்பூசிகளை பெறவுள்ளன. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Embed widget