மேலும் அறிய

ஒரு நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி.. கரூர் மாவட்ட நிர்வாகம் இலக்கு..!

கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 61,724 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இன்று இரண்டாம் முகாமில் மொத்தம் 624 இடங்களில் உள்ள முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது

கரூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி இன்று இரண்டாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

கரூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் வழிகாட்டுதலோடு கடந்த வாரம் 12.09.2021 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முதற்கட்டாக நடத்தப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அறிவித்த இலக்கை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் 61,724 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஒரு நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி.. கரூர் மாவட்ட நிர்வாகம் இலக்கு..!

கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 9,03,245 நபர்கள்.  இதில் இதுவரை தடுப்பூசி மூலம் 5,97,236 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 4,90,693 நபர்கள். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 1,06,543 நபர்கள். 4,12,552 நபர்களுக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது. 

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் மற்றொரு  வாய்ப்பாக, தற்போது இரண்டாம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.  இம்முகாமின் மூலம் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி.. கரூர் மாவட்ட நிர்வாகம் இலக்கு..!

மொத்தம் 624 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  இதில் 3,744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அரவக்குறிச்சி சட்மன்ற தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் சட்மன்ற தொகுதியில் 96 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் சட்மன்ற தொகுதியில் 196 இடங்களிலும், குளித்தலை சட்மன்ற தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 முகாம்களில் இரண்டாவது முறையாக மாபெரும் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 

ஒவ்வொரு முகாமிலும் ஒரு செவிலியர், இரண்டு குழந்தைகள் நல மைய பணியாளர்கள், ஒரு சுயஉதவிக்குழு உறுப்பினர், இரண்டு ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் 3,744 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் குழு, பதிவேடுகள் பராமரிக்கும் குழு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்களை வரிசைப்படுத்தும் குழு, சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிந்து வந்திருப்பதை உறுதிசெய்தல் குழு என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒரு நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி.. கரூர் மாவட்ட நிர்வாகம் இலக்கு..!

இம்முகாம் மூலம் அனைவரும் கொரோனோ தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாகிட அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவோம். இன்று நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கூறியுள்ளதுபோல் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் விரைந்துவந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களது உடல் நலத்தை பேணிக் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget