மேலும் அறிய
ஒருங்கிணைந்த காஞ்சிபுரத்தில் 21 நாட்களில் 843 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு..!
காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 15 வயதுக்கு உட்பட்ட 843 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையானது வேகமாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் தளரவில்லை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் நிலை வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர் . மூன்றாவது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு வகைகளில் முயற்சி எடுத்து வருகிறது . அதிக அளவு பரிசோதனை முகாம்கள் ஏற்படுத்தி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது . அதே போல வைரஸ் தொற்றின் தடுப்பதற்கு தற்போது கையில் இருக்கும் ஆயுதமான தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளது .

கடந்த முதல் அலையில் பொழுது 50 வயதிற்கு மேல் உள்ளவர்களிடையே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தற்போது இரண்டாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் 18 முதல் 40 வயது உட்பவர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சமீப நாட்களாக 1 வயதுடைய குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றானது இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. கடந்த 29ஆம் தேதி முதல் இம்மாதம் 19 ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 25 8குழந்தைகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது சுகாதாரத்துறையின் அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் அதில் 1வயது முதல் 5 வயதுக்கு 48 குழந்தைகள் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 585 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 113, கடந்த சில நாட்களாகவே பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகளுக்கு என தற்போது வரை பிரத்யேகமாக கொரோனா சிறப்பு மையங்கள் எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்படவில்லை. குழந்தைகளுடன் தங்கும் பெற்றோர்களுக்கும் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து மருத்துவர் மணிவண்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, கடந்த ஒரு மாத காலமாகவே வைரஸ் தொற்று தற்போது குழந்தைகளையும் பாதித்து வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோர்கள்தான்.

பெற்றோர் வெளியே சென்று வரும்பொழுது அரசு சொல்லும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றினால் மட்டுமே பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று வராமல் இருக்கும். அதேபோல குழந்தைகள் வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது போக்குவரத்து துவங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது உள்ளிட்டவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும் . அவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் குழந்தைகளை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion