நெல்லையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று!
நெல்லையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கும், தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது,
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 28 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, நேற்று 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரட்டை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது சற்றே ஆறுதல், மாவட்டத்தில் இதுவரை 49822 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதே போல் மொத்தமாக மாவட்டத்தில் 49301 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 436 இருக்கிறது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், இந்நிலையில் 85 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43629 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43097 ஆக அதிகரித்துள்ளது, இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது சற்றே ஆறுதல், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 523 ஆக இருக்கிறது. நேற்று 5 பேர் சிகிச்சை பெற்று வந்தனர், இந்நிலையில் இன்று 9 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27422-ஆக உயர்ந்துள்ளது, குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26925-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 486 இருக்கிறது. நேற்று 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர், இந்த நிலையில் இன்று மொத்தமாக மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, நேற்று 30 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 38 பேருக்கு உறுதியாகியுள்ளது,, கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது சற்றே ஆறுதல், மாவட்டத்தில் இதுவரை 56682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதே போல் மொத்தமாக மாவட்டத்தில் 56142 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 412 இருக்கிறது. நேற்று 96 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இந்நிலையில் இன்றைய பாதிப்பும் சேர்த்து மொத்தமாக 128 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )