IIT Madras: நாளுக்குநாள் கொரோனா அதிகரிப்பு.. அச்சமூட்டும் சென்னை ஐஐடி.! 200ஐ நெருங்கும் பாதிப்பு!
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 196 ஆக அதிகரித்துள்ளது.
IIT Madras COVID cluster | 13 more positive cases reported today. Total positive cases 196 now: Tamil Nadu Health Department
— ANI (@ANI) April 30, 2022
(file pic) pic.twitter.com/SQl5gFUkqS
முன்னதாக, தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு
COVID19 | 3,688 new cases in India today; Active caseload rises to 18,684 pic.twitter.com/9NB1foJONC
— ANI (@ANI) April 30, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )