மேலும் அறிய

COVID-19 vaccine: தமிழ்நாடு போலீசார் உயிரைக் காப்பாற்றிய தடுப்பூசி- ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

கொரோனா இறப்புக்கு எதிரான போராட்டத்தில்,  தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் 82% கூடுதல் பாதுகாப்பை பெறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழ்நாடு காவல்துறை பணியாளர்களில், தீவிர நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா இறப்பு சம்பவங்கள் மிகக் குறைவு என ஐசிஎம்ஆர் தேசிய தொற்றுநோய் தடுப்பு அமைப்பு மற்றும் வேலூர் சிஎம்சி கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.   

1 லட்சத்துக்கும் அதிகமானோர் (117,524) பணிபுரியும் தமிழ்நாடு காவல்துறையில், 2021 பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 14 வரை, 67,673 காவலர்கள் இரண்டு கட்ட தடுப்பூசியும், 32,792 பேர் முதல் கட்ட தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களின் எண்ணிக்கை 17,059. இவர்களின் மருத்துவ அறிக்கையை குழு விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.   

கொரோனா இறப்பு தரவுகள்: 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழ்நாடு காவல்துறையில் 2021 ஏப்ரல் 13 முதல் மே 14ம் தேதி வரையில்  31 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் சராசரி இறப்பு வயது 52 ஆக உள்ளது.

இந்த 31 கொரோனா இறப்புகளில், நான்கு பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்கள். ஏழு பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள 20 பேர் தடுப்பூசிகள் போடாதவர்கள்.  COVID-19 vaccine:  தமிழ்நாடு போலீசார் உயிரைக் காப்பாற்றிய  தடுப்பூசி- ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

எனவே, கொரோனா இறப்புக்கு எதிரான போராட்டத்தில்,  தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் 82% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 95 சதவிகித கூடுதல் பாதுகாப்பையும் பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.  

முந்தைய ஆய்வறிக்கைகள்:  

தீவிரமான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு 97% பாதுகாப்பு கிடைப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / அஸ்ட்ராஜெனெகா நடத்திய மூன்றாம் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த இடைக்கால அறிக்கையும் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. 

மேலும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் முன்னதாக  தடுப்பூசி செயல்திறன் குறித்த ஆய்வறிக்கையை முன்னதாக வெளியிட்டது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட 8991சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்,"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட, முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்ட கொரோனா நோயாளிகள் 70% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் 77% கூடுதல் பாதுக்காப்பையும் பெறுகின்றனர். 

தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு - ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் (NEEDED OXYGEN THERAPHY) மற்றும் தவிர சிகிச்சைப் பிரிவில் (NEEED ICU CARE) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் 95% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முறையே 94% கூடுதல் பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது. 

எனவே, தடுப்பூசியின் செயல்திறன் குறித்த எங்களது ஆய்வறிக்கை முந்தைய ஆய்வுகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget