Corona Update: மயிலாடுதுறை இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்றின் எண்ணிக்கை 27,045 ஆக உயர்ந்ததுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் மக்களுக்கு இன்றளவும் பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38-வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்து 45 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 26 ஆயிரத்து 599 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ள சூழலில் இன்று மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 116 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 330 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என இந்திய அரசு முழு வீச்சில் நாடு முழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்து 99 ஆயிரத்து 766 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Ashwin vs Washington: அஷ்வினா? வாஷிங்டன் சுந்தரா? டி20 உலகக் கோப்பையில் பிசிசிஐயின் ப்ளான் என்ன?
முதல் தவணை தடுப்பூசியும் 13 லட்சம் 3 ஆயிரத்து 801 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 11 லட்சத்து 99 ஆயிரத்து 696 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 96 ஆயிரத்து 269 பேருக்கு செலுத்தியுள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 91 ஆயிரத்து 460 பேரும், பெண்கள் 13 லட்சத்து 11 ஆயிரத்து 508 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 529 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் கோவாக்சின் 3 லட்சத்து 52 ஆயிரத்து 223 பேருக்கும், கோவிஷீல்ட் 21 லட்சத்து 77 ஆயிரத்து 57 பேருக்கும் கோர்பேவாக்ஸ் 70 ஆயிரத்து 486 பேருக்கு போடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )