Covid 19 Cases in India: இந்தியாவில் இதுவரை 7,743 பேருக்கு ஒமிக்ரான் - ஒராண்டு நிறைவு பெற்ற தடுப்பூசி திட்டம்
இந்தியாவில் இதுவரை 7,743 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் இன்றுடன் ஒராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 2,71, 202 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று 2,68,833 பேருக்கு உறுதியான நிலையில் இன்று 2,71, 202 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,68,50,962இல் இருந்து 3,71,22,164 ஆக உயர்ந்துள்ளது.
India reports 2,71,202 COVID cases (2,369 more than yesterday), 314 deaths, and 1,38,331 recoveries in the last 24 hours.
— ANI (@ANI) January 16, 2022
Active case: 15,50,377
Daily positivity rate: 16.28%)
Confirmed cases of Omicron: 7,743 pic.twitter.com/NhnMY247oV
ஒரேநாளில் கொரோனாவுக்கு 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்தோர் எண்ணிக்கை 4,85,752இல் இருந்து 4,86,066 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் ஒரே நாளில் 1,38,381 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,47,390இல் இருந்து 3,50,85,721 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,50,377 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 7,743 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒராண்டில் 156.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் கூறியுள்ளது. கடந்தாண்டு ஜனவரி 16ஆம் ஆண்டு தடுப்பூசி திட்டம் தொடங்கிய நிலையில் ஒராண்டு நிறைவு பெற்றுள்ளது. நேற்று ஒரேநாளில் 66,21,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Union Health Minister Mansukh Mandaviya calls India's vaccination drive "the most successful in the world," on #1YearOfVaccination.
— ANI (@ANI) January 16, 2022
India’s cumulative COVID-19 vaccination coverage has exceeded 156.76 crore. More than 66 lakh vaccine doses have been administered in last 24 hrs. pic.twitter.com/vlaAwYmlJc
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )