மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா; 72 பேர் பலி - முழு விவரம்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,867ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 432 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 222 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 222 ஆக உள்ளது.

கோவை 445, ஈரோடு 349, சேலம் 245, திருப்பூர் 225, தஞ்சாவூர் 227, செங்கல்பட்டு 184, நாமக்கல் 114, திருச்சி 166, திருவள்ளூர் 99, கடலூர் 96, திருவண்ணாமலை 127, கிருஷ்ணகிரி 87, நீலகிரி 74, கள்ளக்குறிச்சி 95, கன்னியாகுமரி 78, மதுரை 75, விழுப்புரம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, வேலூரில் நேற்றைவிட இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 72 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8222 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 8, சேலம் 7,திருச்சி, கோவை தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 15 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 15 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 35,294 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 4,382 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,27,988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 153 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40,128 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,820 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6551 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Embed widget