சேலம்: இன்று 245 பேருக்கு கொரோனா பாதிப்பு - 7 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.7 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1480 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 112 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 86025 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89128 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1609 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் மக்களுக்கு செலுத்தப்படவில்லை. இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,05,845 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மாவட்டத்திலுள்ள 85 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது , தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மூன்று மையங்கள் தொங்கும் பூங்கா, மெய்யனுர் சட்டக்கல்லூரி மற்றும் காந்தி ஸ்டேடியம் உள்ள 420 படுக்கைகள் நோயாளிகள் வரத்து இல்லாததால் நேற்று மூடப்பட்டது. மேலும் தொற்று குறையும் பட்சத்தில் அனைத்து தற்காலிக சிகிச்சை மையங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 89 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 95 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 87 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 165 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 844 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















