அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!
பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் கவனக்குறைவாக இருப்பதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் , ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது .
நாடு முழுவதும் இருக்கும் ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்திய அரசு தெரிவித்துள்ளநிலையில் . இதை நடைமுறை படுத்தும் வகையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் , மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரையின் பேரிலும் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது .
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் தவறாக பயன்படுத்தி வருவத்தின் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .
குறிப்பாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 991 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதில் அதிகப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 நபர்களும் , செங்கல்பட்டை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் 122 நபர்களும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 103 நபர்களும் , வேலூர் , விழுப்புரம் , திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 கும் குறைவானார்கள் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த 8 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உள்ளது . இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 228 நபர்களும் , வேலூர் மாவட்டத்தில் இருந்து 27 நபர்களும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 நபர்களும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 63 நபர்களும் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 170 நபர்களும் , காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 112 , 98 மற்றும் 196 நபர்கள் முறையை நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இந்த 8 மாவட்டங்களிலும் நோயின் தீவிரத்தால் இன்று 34 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .
மேலும் இன்றைய நிலவரப்படி வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 7728 ஆக உள்ளது . இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025 கொரோனா நோயாளிகளும் , இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 1394 நபர்களும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1326 நபர்களும் , விழுப்புரத்தில் 860 கொரோனா நோயாளிகளும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 800 கொரோனா நோயாளிகளும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 595 நபர்களும் , காஞ்சிபுரத்தில் 390 நபர்களும் , வேலூரில் 338 நபர்களும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )