Corona Update: இதுவரை 66.13 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.. உலகளவில் ஒரு கொரோனா அப்டேட்
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 80 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 கோடியே 89 லட்சத்து 82 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 66 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று
சீனாவின் ஊஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கொடிய கொரோனா வைரஸ் உலகத்தின் இயக்கத்தையே நிறுத்தியது. பலருக்கும் 2020 தாண்டி 3 வருடம் வந்துவிட்டோம் என்பது இன்னும் நம்ப முடியாத விஷயமாகவே உள்ளது. அந்த அளவுக்கு நம் வாழ்வை மாற்றி அமைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ். இது இதுவரை 228 நாடுகளுக்கு பரவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. முன்பிருந்தது போல இப்போது லாக்டவுன்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், கொரோனா பரவல் இருந்துகொண்டுதான் உள்ளது.
உலக அளவில் தொற்று பாதிப்புகள்
தற்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 80 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 கோடியே 89 லட்சத்து 82 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொற்று பாதிப்புகள்
இந்தியாவில் 756 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 8,115-இலிருந்து 7,623 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தரவு தெரிவித்துள்ளது. 7 இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,31,839-ஆக அதிகரித்துள்ளது, என்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக (4,49,86,461) பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டவர்கள் எண்ணிக்கை
இந்திய அளவில் கொரோனவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.80% ஆகும், ஆயுஷ் அமைச்சகம் கூறியது. நோயிலிருந்து மீண்ட நபர்களின் எண்ணிக்கை 4,44,47,472 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.18% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் வலைதளத்தின்படி, நாடு முழுவதும் 220.66 கோடி அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிராஸ் கன்ட்ரி நோய்த்தடுப்பு இயக்கத்தின் போடப்பட்டுள்ளன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )