கரூர் : புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று..ஒருவர் உயிரிழப்பு..!
கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது
கரூரில், இன்று புதிதாக 16 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் நபர்களின் எண்ணிக்கை 22-ஆக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, இறப்பு விகிதம் எதுவும் இல்லாத நிலையில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் நிலவரம் குறித்து நாள்தோறும் சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியவர்கள், மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களை பார்த்தோம்.
அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள், சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியவர்கள், சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கையை தற்போது காணலாம். கரூர் மாவட்டத்தில் இதுவரை 22,447 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய எண்ணிக்கை 21,840 நபர்களாக உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவரின் எண்ணிக்கை 350-ஆக உள்ளது. அதேபோல் தற்போது காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தொற்று பாதித்தவர்கள் 257 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று தமிழ்நாடு அரசு இன்னும் ஒரு வார காலத்திற்கு இதே ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மறு அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆன்மீகத் தலங்கள், அரசு பேருந்துகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் தடுப்பூசி முகாம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாம் அதிக அளவில் ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்துகொண்டு வருகின்றனர். தற்பொழுது தளர்வுகளை பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளி முகக்கவசம் உள்ளிட்ட நடைமுறைவிதிகளை பின்பற்றவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.