மேலும் அறிய

கோவை: இன்று 891 பேருக்கு கொரோனா: 23 பேர் உயிரிழப்பு!

கோவையில் இன்று 891 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 13 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தினசரி கொரொனா பாதிப்புகள் 1000 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளது. கோவையில் இன்று 891 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து  13 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 9566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 2104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 907 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 23 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1911 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கோவை மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன இந்த இரண்டு மாவட்டங்களிலும் தினசரி பாதிப்புகள் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் தினசரி கொரொனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்று 795 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2042 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 84 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 555 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 79182 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 75142 ஆகவும், மொத்த உயிரிழப்பு 699 ஆகவும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 166 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 442 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளார். 1634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 27324 ஆகவும், குணமடைந்தவர்கள் 25540 ஆகவும், உயிரிழப்புகள் 150 ஆகவும் உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok sabha Election LIVE : நீலாங்கரை வாக்குச்சாவடியை நோக்கி புறப்பட்டார் நடிகர் விஜய்..!
நீலாங்கரை வாக்குச்சாவடியை நோக்கி புறப்பட்டார் நடிகர் விஜய்..!
TN Election Vote Percentage: 15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு.. இம்முறை நிலவரம் என்ன?
15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு சதவிகிதம்.. இம்முறை நிலவரம் என்ன?
TN Election Vote Percentage: 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்.. கள்ளக்குறிச்சியை பின்னுக்கு தள்ளிய நாமக்கல் தொகுதி!
11 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 23.87 சதவிகித வாக்குகள் பதிவு!
TN Lok Sabha Election: நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai casts vote  : Lok Sabha Elections 2024 :  படையெடுத்து வந்த திரைப் பிரபலங்கள்..வரிசையில் நின்று வாக்குப்பதிவு!Thirumavalavan Prayer : வாக்குப்பதிவுக்கு முன்காளியம்மன் கோயிலில் திருமா!MK Stalin casts vote : ”இந்தியா வெற்றி பெறும்” வாக்களித்தார் முதல்வர்! மனைவியுடன் வாக்குப்பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok sabha Election LIVE : நீலாங்கரை வாக்குச்சாவடியை நோக்கி புறப்பட்டார் நடிகர் விஜய்..!
நீலாங்கரை வாக்குச்சாவடியை நோக்கி புறப்பட்டார் நடிகர் விஜய்..!
TN Election Vote Percentage: 15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு.. இம்முறை நிலவரம் என்ன?
15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு சதவிகிதம்.. இம்முறை நிலவரம் என்ன?
TN Election Vote Percentage: 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்.. கள்ளக்குறிச்சியை பின்னுக்கு தள்ளிய நாமக்கல் தொகுதி!
11 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 23.87 சதவிகித வாக்குகள் பதிவு!
TN Lok Sabha Election: நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
Samuthirakani:
"எவ்வளவோ கெஞ்சினேன்.." படம் எடுப்பதையே நிறுத்திய சமுத்திரகனி.. என்ன காரணம் தெரியுமா?
Lok Sabha Election 2024: மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
Rajinikanth:
"ஓட்டு போடுவதில் மரியாதை, கௌரவம் இருக்கு” - வாக்காளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
Sivakarthikeyan:
"புல்லட்டை விட வலிமையானது பேலட்” - வாக்களிக்க வருமாறு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
Embed widget