TN Corona Spike: தமிழ்நாட்டில் 1000-ஐ கடந்த கொரோனா தொற்று பாதிப்பு.. கட்டாயமாகும் முகக்கவசம்?
தமிழ்நாட்டில் 1,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு கடந்த வாரம் 150 கீழ் இருந்த நிலையில் தற்போது 200-ஐ நெருங்கியுள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 198 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்றைய முன் தினம் 186-ஆக இருந்தது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 993-ஆக இருந்த நிலையில் இன்று 1,086 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு தமிழ்நாட்டில் 1000 ஐ கடந்து தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் யாரும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 105 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இரண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,593 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மொத்தமாக 326 பேர் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் 117 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் 4,435 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் 3500க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 4000 ஐ கடந்து பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொற்று பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )