கொரோனா தொற்று பாதிப்பால் இதன் திறன் குறையுமா? எய்ம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..
எய்ம்ஸ் பாட்னா, டெல்லி, ஆந்திரா- மங்கலகரி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
எய்ம்ஸ் பாட்னா, டெல்லி, ஆந்திரா- மங்கலகரி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஓமிக்ரானின் BF.7 மாறுபாட்டின் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால் தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் கோவிட் நோயின் நான்காவது அலை இருக்குமா என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அடுத்து வரும் 40-45 நாட்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனறும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உச்சம் பெற்று 40 நாட்களில் இந்தியாவிலும் தொற்று பரவல் கணிசமாக உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதும் இந்தியாவில் அதன் தொடர்ச்சியாக ஓரிரு வாரத்தில் தொற்று பரவத் தொடங்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக 30 நபர்களிடம் விந்தணு சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021-க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களின் விந்தணு சோதனை என்று அழைக்கப்படும் விந்து பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று ஏற்பட்ட உடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின் இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சோதனை செய்யப்பட்டது. முதல் மாதிரியில் விந்தணுவின் தரம் மோசமாக இருப்பதாகவும், இரண்டாவது முறை மேற்கொண்ட ஆய்வில் கூட விந்தணு தரம் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. விந்தணுப் பகுப்பாய்வு மூன்று விஷயங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படுகிறது. அவை விந்தணுவின் ஆரோக்கியம், விந்தணுக்களின் எண்ணிக்கை விந்தணுக்களின் வடிவம், விந்தணுவின் இயக்கம் ஆகும்.
30 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேருக்கு (40 சதவீதம்) விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு 3 பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், முதல் விந்து மாதிரியில் 30 பேரில் 10 பேரின் விந்தணுவின் அளவு 1.5 மில்லிக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு முறை விந்து வெளியேறினால் அதில் குறைந்தபட்சம் 1.5 மில்லிக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இதேபோல, விந்தணுவின் தன்மை, உயிருடன் இருக்கும் விந்தணு மற்றும் மொத்த இயக்கம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சதீஷ் திபாங்கர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் விந்தணுவில் தென்படவில்லை என்றாலும், அதன் தாக்கம் வின்தணுவை பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐவிஎஃப் மையத்தின் டாக்டர் கவுரி அகர்வால் கூறுகையில், ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் ஆண்களின் விந்தணு சோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் உலகம் முழுவது விந்தணு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகிறது என்றார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )