மேலும் அறிய

TN Corona Spike: தமிழ்நாட்டில் 3000-ஐ நெருங்கும் கொரோனா தொற்று பாதிப்பு.. மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமா?

தமிழ்நாட்டில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தமிழ்நாட்டில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தமிழ்நாட்டில் புதிதாக 469 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக உயிரிழப்பு பதிவாகி வருகிறது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 2,684 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி ஓமன், இலங்கை, மலேசியா, குவைத்திலிருந்து வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,437 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் 469 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 3000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 36,00,706 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 129 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 799 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், செங்கல்பட்டில் நேற்று 12.2  சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு இன்று 11.8% ஆக பதிவாகியுள்ளது.  கோவை – 11.5%, கன்னியாகுமரி – 10.5%, சென்னை - 9.8%, திருச்சி – 9.1%, ராணிப்பேட்டை – 9.4% என பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் சென்னையை சேர்ந்த 80 வயது முதியவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமான நிலையம் மட்டுமல்லாமல் ரயில் நிலையம் மற்றும் துறைமுகங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது சுகாதார துறை தரப்பில் தினசரி கொரோனா பரிசோதானையை 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொரோனா மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.  

Tamil Newyear: சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு.. அதிகாலையில் கோயில்களில் குவிந்த பகதர்கள்..

PM Modi: “இந்தியர்கள் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகிறார்கள்” - தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Ajith Kumar :
Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Ajith Kumar :
Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
அஜித் வாங்கியது ஆறுதல் பரிசா..? வதந்திகளை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள் ?
அஜித் வாங்கியது ஆறுதல் பரிசா..? வதந்திகளை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள் ?
Pongal 2025: இப்படியும் உண்டா...? ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
இப்படியும் உண்டா...? ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
Pongal wishes 2025 : ”வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” அரசியல் கட்சி தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள்..
Pongal wishes 2025 : ”வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” அரசியல் கட்சி தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள்..
Train Accident: திடீரென பயங்கர சத்தம் ; தடம்புரண்ட ரயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
திடீரென பயங்கர சத்தம் ; தடம்புரண்ட ரயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
Embed widget