மேலும் அறிய

காது கேளாமை குழந்தைகளுக்கு புதிய வாழ்வு... அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கை!

காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை; விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர்கள்

பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் இயல்பான வாழ்க்கையை வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் (7), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அபிம்மா (11) ஆகிய இருவரும் பிறவியிலிருந்தே கடுமையான காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டதால் தற்போது இருவரும் இயல்பாக பேசுவதோடு, கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அபிம்மா பள்ளியில் முதல் ரேங்க் பெற்று வருவதுடன் பாடல்களையும் பாடி வருகிறார். தர்ஷனும் பள்ளியில் நன்றாக படித்து வருகிறார்.

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள்

இதுகுறித்து மருத்துவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அறுவை சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், "இரு குழந்தைகளுக்கும் 90 சதவீதத்திற்கும் மேல் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது" என்றார்.

145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சை

மேலும், பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தற்போதுள்ள மருத்துவ வசதிகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் சத்தத்திற்கு பதிலளிக்காதது, பெயர் சொல்லியும் திரும்பிப் பார்க்காதது, இரண்டு வயதைக் கடந்தும் பேசத் தொடங்காதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget