மேலும் அறிய

Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?

Agni Natchathiram 2026 Start and End Date in Tamil: 2026க்கான அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை இருக்கும் என்பதால் இந்த 25 நாட்களும் வெயில் வதைக்கும். அப்போது என்ன செய்யலாம்? கூடாது?

கோடைக் காலம் என்றாலே கத்தரி வெயிலும் அக்னி நட்சத்திரமும்தான் பலருக்கு நினைவு வரும். அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதன் ஆன்மிகப் பின்னணி, செய்ய வேண்டியவை, கூடாதவை பற்றிக் காணலாம்.

அக்னி நட்சத்திரம் எப்போது தொடங்குகிறது?

2026ஆம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நாளை (மே 4ஆம் தேதி) தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாட்களில் என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது? எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பார்க்கலாம்.

தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே 'அக்னி நட்சத்திரம்' அல்லது 'கத்திரி வெயில்' என அழைக்கப்படுகிறது. சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்தில் நுழைந்து, நெருப்புக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை முழுமையாகக் கடந்து, ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரமாகும்.

Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?

பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் பிற்பகுதியில் அதாவது மே முதல் வாரத்தில் தொடங்கி, வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை சுமார் 21 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கும். ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. 

ஆன்மிகப் பின்னணி

சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த முருகப் பெருமானுக்கு உரிய 'கிருத்திகை' நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலேயே இந்த நாட்களில் பூமியில் வெப்பம் தகிக்கிறது என்பது ஐதீகம். நெருப்பின் அதிபதியான அக்னி தேவன், தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் காலமாக இது கருதப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் இறைவனின் உக்கிரத்தைத் தணிக்க, சிவன் கோவில்களில் மூலவர் மீது சொட்டுச் சொட்டாக நீர் விழும்படி சிறிய துளைகள் இடப்பட்ட பாத்திரத்தைக் கட்டி தாராபிஷேகம் செய்வார்கள். அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினமும் உச்சிக்கால பூஜை தொடங்கி மாலை பூஜை வரை இந்த அபிஷேகம் நடைபெறும். மாரியம்மன் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், பால்குட விழாக்களும் நடைபெறும்.

Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?

என்ன செய்யலாம்?

  • வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும்.
  • தளர்வான பருத்தி ஆடைகளை, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டியது அவசியம்.
  • வெளியே செல்வதை முடிந்த அளவு காலை, மாலை நேரங்களில் போகுமாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
  • வெளியே செல்லும்போது குடை, தொப்பி, சன் கிளாஸ் போன்றவற்றை அணியுங்கள். சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவதும் நல்லது.
  • தாகத்தால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர், மோர் மற்றும் பானகங்களை வழங்கலாம்.

என்ன செய்யக் கூடாது?

  • சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் (காலை 11 மணி முதல் 4 மணி வரை) தேவையின்றி வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் காரமான மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • பயணங்களை குறிப்பாக நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  

Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?

ஆன்மிக ரீதியாக…

காலை, மாலை வேளைகளில் சிவன் கோயில்களுக்கும் அம்மன் கோயில்களுக்கும் செல்லலாம்.

சாஸ்திர மற்றும் ஜோதிட ரீதியாக, இந்த 21 நாட்களும் சுப காரியங்களுக்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. எனவே திருமணம், கிரகப்பிரவேசம், புதிய கட்டிடங்களுக்குப் பூமி பூஜை செய்தல், மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத்திற்கான விதை விதைத்தல் போன்ற முக்கிய காரியங்களைச் செய்வதை மக்கள் பாரம்பரியமாகத் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நாட்களில் உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Frequently Asked Questions

அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யக்கூடாது?

மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். காரமான, அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget