Diabetes: டைப் 2 சர்க்கரை வியாதியா...? இந்த 3 வழியை ஃபாலோ பண்ணுங்க..!
டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிமையான 3 வழிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான்.
டைப் 2 சர்க்கரை:
டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து விடுபட எளிமையான 3 வழிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது.
இந்தியா 2ம் இடம்:
இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாம இருப்பது ஏற்படுகிறது.
ஒருவேளை சர்க்கரை வந்துவிட்டால் அதுவும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிட்டால் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைபிடியுங்கள்.
தண்ணீருக்கு முக்கியத்துவம்:
தண்ணீர் அதிகமாக அருந்துங்கள். நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். யூரோப்பியன் ஃபுட் சேஃப்டி ஆலோசனையின்படி ஒரு பெண் அன்றாடம் 1.6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது 200 மில்லி அளவு கொண்ட டம்ப்ளரில் 8 டம்ப்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு ஆண் அன்றாடம் 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
உடல் எடையை குறைக்கவும்:
உடல் எடையை குறைப்பதால் சர்க்கரை நோயால் இதய நோய், பக்கவாதம் ஏற்படாமல் இருக்கும். எடை குறைப்பு சர்க்கரை நோய் வராமலேயே கூட தடுக்கும். கல்லீரல், மண்ணீரலில் சேரும் கொழுப்பு சர்க்கரை வியாதிக்கு வழிவகுக்கும். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்
புகைப்பிடித்தலை தவிர்த்தல் அவசியம். சர்க்கரை நோய் வர புகைத்தலும் ஒரு காரணம். புகைப்பிடிப்பதை கைவிட்ட 20வது நிமிடத்திலேயே இதய துடிப்பு சீராகி, ரத்த அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது. 12 மணி நேரத்தில் கார்பன் மோனாக்ஸைடு அளவு குறைந்துவிடும். 2 வாரங்களில் இதய நோய்கள் பாதியாக குறையும்.
வாழ்க்கைமுறையை மாற்றுங்கள்
சர்க்கரை நோய் இப்போதைய காலகட்டத்தில் 5 வயது முதல் அனைவரையும் பாதிக்கிறது. உண்மையில் சர்க்கரை அதிகமாதல் நோயா என்றால் அது வியாதி அல்ல என்றுதான் கூற வேண்டும். ஆனால் அதை கவனிக்காமல் தடுக்காமல் விட்டால் பல்வேறு நோய்களை வரவேற்கும் வரவேற்பாளராக மாறிவிடும். அதனால் ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி என்று உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )