TN Fact Check : வக்பு வாரியம், சொத்தை அபகரிக்கலாம் என பரவும் வதந்தி: தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
வக்பு வாரியத்தின் சட்டங்களின்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டால், பரம்பரை சொத்துக்கள் கூட மாற்றப்படும் என வதந்திகள் பரவி வருகிறது.
இந்துக்கள் சொத்தை இஸ்லாமியர்கள் பறிக்கக்கூடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
பரவும் வதந்தி:
வக்பு வாரியத்தின் சட்டங்களின்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டால், உங்களது பரம்பரை சொத்துக்கூட அவர்களது சொத்தாகி விடும். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இயலாது, வக்பு வாரியத்தைச் சேர்ந்த நீதிமன்றத்துக்கே செல்ல முடியும் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வக்ஃப் வாரியம் நினைத்தால் இந்துக்கள் சொத்தை அபகரிக்கலாம் என்று பரவும் வதந்தி!
— TN Fact Check (@tn_factcheck) June 22, 2024
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/02R66XhRtz pic.twitter.com/LJbqEbnPaV
உண்மை என்ன?
இந்த சம்பவம் குறித்து வக்பு வாரியத்தின் தலைவர், அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில் , எந்த ஒரு தனிமனிதரின் சொத்தையும், வக்பு வாரிய சட்டப்படி தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடவோ, கையகப்படுத்தவோ முடியாது. அதேபோல், சொத்துரிமை தொடர்பான புகார்களை வக்பு வாரியம் விசாரிக்கலாம். ஆனால், இது இறுதியானதல்ல,
அதற்கு அடுத்தபடியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் அங்கமான வக்பு வாரியத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். வாரிய உறுப்பினர்கள் அதில் இடம்பெற மாட்டார்கள் என வக்பு வாரியத்தின் தலைவர், அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்
இந்நிலையில், பரவி வருவது உண்மையற்றது, பொய்யான வதந்தி என தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.