மேலும் அறிய

Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?

Fact Check: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், கிரிக்கெட் வீரர் மார்க்கமிற்கு முத்தமிட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Fact Check: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், கிரிக்கெட் வீரர் மார்க்கமிற்கு முத்தமிட்டதாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவும் தகவல்:

கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தமிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சுருள்வேல் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன். கர்மா என்பது யாதெனில் அன்னைக்கு நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் நடக்காத ஒன்றை சன் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டினான் இன்று அவனது மகளின் கேவலமான வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இதுக்கும் திமுக கொத்தடிமை நாய்கள் வெட்கமில்லாமல் முட்டு கொடுப்பானுக பாருங்க.” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, பெண் ஒருவர் மார்க்கமிற்கு முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதேபோன்று பலரும் அந்த புகைப்படம் மற்றும் தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?

             இணையத்தில் வைரலாகும் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்

வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

 வைரலாகும் வீடியோவை ஆராய்ந்து பார்த்தபோது, ஐடன் மார்க்ரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பது தெரிய வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ”Words will never be enough. I am so proud of you and this incredible team. The hard work, determination and passion that was displayed was truly special to witness. Thank you to all of those that supported us and this phenomenal team. To our friends and family,Thank you!” என்று நிக்கோல் மார்க்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். First Betway SA20ல் கோப்பை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பின் வெற்றிக்கு தனது கணவரைப் பாராட்டி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள முத்தமிடும் காட்சியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?

   மார்க்ரமின் மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்

அவர் பதிவிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் நிக்கோல் அணிந்திருக்கும் ஆடை, கடிகாரம் உள்ளிட்டவையும், ஐடனின் கண்ணாடி உள்ளிட்டவைகளும் வைரல் புகைப்படத்துடன் ஒத்துப்போகின்றன. எனவே, வைரல் புகைப்படத்தில் ஐடன் மார்க்கரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பது தெளிவாகிறது. குறிப்பிட்ட நிகழ்வின் புகைப்படமே கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் என்று சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?

  உண்மையான & இணையத்தில் வைரலான புகைப்படங்களின் ஒப்பீடு

தீர்ப்பு:

கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget