மேலும் அறிய

Fact Check: கர்நாடக மக்களை பாவிகள் என்றாரா பிரதமர் மோடி? - தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

Fact Check: பிரதமர் மோடி கர்நாடக மக்களை பாவிகள் என கூறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fact Check: பிரதமர் மோடி கர்நாடக மக்களை சாடியதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கீழே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

வீடியோ சொல்வது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மக்களை "பாவிகள்" என்று கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோ கிளிப்பில் பிரதமர் மோடி, ”இந்தத் தேர்தலில் கர்நாடகா மக்கள் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள். வரும் ஆண்டுளில் இது நடைபெறும் என மோடியாகிய நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்” என பேசியுள்ளார்.  இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஒருவர், “மோடி தெளிவாக தோல்வியுற்றுள்ளார். அவர் தனது சொந்த போஸ்டிலேயே கோல் அடித்து வருகிறார். தற்போது கர்நாடக மக்களை பாவிகள் என்று கூறியுள்ளார். இது போன்ற அவமானங்களுக்கு கர்நாடகா ஒரு இறுக்கமான அறையால் பதிலடி கொடுப்பது அனைவரும் அறிந்ததே! மாநிலத்தில் பாஜக அழிந்துவிடும்” என குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோ உண்மை இல்லை. பிரதமர் மோடி கர்நாடகா காங்கிரஸை சாடிய வீடியோ, கர்நாடக மக்களை சாடியது போல எடிட் செய்யப்பட்டுள்ளது.

வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

வீடியோ தொடர்பான முக்கிய வார்த்தைகளைக் கொண்டு, யூடியூபில் தேடியதன் மூலம் விசாரணையைத் தொடங்கினோம். அந்த முயற்சியில் YOYO TV கன்னடத்தில் ஏப்ரல் 28 , 2024 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவை கிடைத்தது. அந்த வீடியோவின் தலைப்பு, “BJP பொதுக்கூட்டத்தில் PM Modi Best Speech at Belagavi | கர்நாடக மக்களவை தேர்தல் 2024 | YOYO TV” என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் 20:53 நேரத்தில்  இருந்து பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு பாவம் செய்தது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 4000 வழங்குவதை நிறுத்தினர். அவர்களுக்கு வாக்குகள் கிடைத்ததால், அவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. மோடி வழங்கும் ரூ.6000 மட்டுமே விவசாயிகள் பெற முடியும். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு பணம் கிடைக்கும், கவலைப்பட வேண்டாம். கர்நாடக காங்கிரஸ் செய்த பாவத்திற்கு, இந்த தேர்தலில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். மேலும் டெல்லியில் இருந்து அனுப்பப்படும் பணம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று மோடி உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறார்” என பேசியிருந்தார்.

ஏப்ரல் 28 , 2024 அன்று பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் இதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.  அதிலும் காங்கிரஸையே அவர் சாடியிருந்தார். வைரல் கிளிப்புக்கும் அசல் வீடியோவுக்கும் இடையிலான ஒப்பீட்டை கீழே காணலாம். இது வைரல் கிளிப்எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்பீடு தெளிவாக்குகிறது.

முடிவுரை

விசாரணையில், பிரதமர் மோடியின் பேச்சு எடிட் செய்யப்பட்டு, உள்நோக்கத்துடன் தவறாக பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது. கர்நாடக மக்கள் பாவம் செய்ததாக பிரதமர் மோடி கூறவில்லை. உண்மையில், "கர்நாடகாவலன்" என்ற வார்த்தையால் அவர் மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

also read: Did PM Modi Call People Of Karnataka Sinners? Here’s The Fact Check.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Fact Crescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ABP Premium

வீடியோ

”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
Embed widget