மேலும் அறிய
காதலனை கரம் பிடித்தார் கார்த்திகை தீபம் சீரியல் ஹீரோயின் அர்த்திகா - குவியும் பாராட்டு..!
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் தொடரில் நடித்து வரும் அர்த்திகா தனது நீண்ட கால காதலனை திருமணம் செய்துள்ளார்.

கார்த்திகை தீபம் நடிகை அர்த்திகா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் நடித்து வரும் அர்த்திகா தனது காதலனை கரம்பிடித்துள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியல் ஹீரோயின்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அர்த்திகா “ பிளாக் அண்ட் வொயிட்’ படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் ஹீரோயினாக அர்த்திகா நடித்து வருகிறார்.
இந்த தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை அர்த்திகா பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் ஜீ குடும்பம் விருதையும் பெற்றுள்ளார். கார்த்திகை தீபம் சீரியல் முதம் தமிழ் குடும்பங்களின் ரசிகையாக மாறிய அர்த்திகா, தனது காதலனை திருமணம் செய்துள்ளார்.
View this post on Instagram
ரசிகர்கள் வாழ்த்து:
இவரின் திருமணம் கடந்த 6ம் தேதி கேரளாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்த அர்த்திகா “ வாழ்வின் சிறந்த தருணம்” என குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அர்த்திகாவுக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளனர்.
4 படங்களில் அர்த்திகா நடித்ததாக கூறும் நிலையில் கார்த்திக்குடன் நடித்த படம் மட்டுமே திரைக்கு வந்துள்ளது. திரைப்படம் மட்டும் இலாமல், கார்த்திக்குடன் இணைந்து ஷார்ட் ஃபிலிமிலும் அர்த்திகா நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அர்த்திகாவுக்கு தமிழ் சீரியலில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது திருமதி செல்வம் சீரியலில் நடித்து பிரபலமான அபிதா தான் என்று கூறப்படுகிறது. சினிமா துறையில் இந்த அளவுக்கு முன்னேறி வர பல சறுக்கல்களையும், அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்ததாகவும், தனக்கு வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழை மறக்க முடியாது என்றும் நேர்க்காணல் ஒன்றில் அர்த்திகா பேசியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து நடித்து கொண்டிருப்பேன் என்றும் கார்த்திகை தீபம் சீரியல் தனது வாழ்க்கயின் முக்கியாமான ஒரு நிகழ்வு என்றும் கூறியுள்ள அர்த்திகா காதலனை கரம்பிடித்துள்ளார். இதற்கிடையே அர்த்திகாவின் காதல் கணவன் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Diwali 2023 Movie Release: கோலிவுட் டூ ஹாலிவுட்.. இந்த தீபாவளிக்கு சரவெடியாய் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement