மேலும் அறிய

Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், இந்த வாரம் கார்த்திக்குக்கு அடுத்தடுத்து சோதனைகள் காத்திருக்கின்றன. உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க கார்த்திக் போராடும் பரபரப்பான காட்சிகள் திங்கட்கிழமை எபிசோடில் இடம்பெறுகின்றன.

மின்னல் வேகத்தில் கார்த்திக்:

உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துக் கொண்டு கார்த்திக் வேகமாகப் பயணம் செய்கிறார். அப்போது வழியில் குறுக்கிடும் ரவுடிகள், கார்த்திக்கைத் திசைதிருப்பி வண்டியை நிறுத்த வைக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் இருந்த இதயத்தைத் திருடிக்கொண்டு தப்பித்து விடுகிறார்கள். கார்த்திக் அவர்களைத் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாமல் போகிறது.

இதயத்தை எரிக்க துடிக்கும் சந்திரகலா:

இதயத்தைக் கடத்திய ரவுடிகள், சந்திரகலாவுக்குத் தகவல் சொல்கிறார்கள். கார்த்திக் சும்மா விடமாட்டான், எப்படியாவது இதயத்தைத் தேடி வந்து விடுவான் என்று நினைக்கும் சந்திரகலா, அந்த இதயத்தை உடனே எரித்துவிடச் சொல்லி அதிரடியாக உத்தரவிடுகிறார். ஆனால், வீட்டில் இருப்பவர்களோ இதைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் விளக்கு பூஜையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ரவுடிகளுடன் மோதும் கார்த்திக்!

இதற்கிடையில், ரவுடிகள் தப்பித்துச் சென்ற இடத்தில் அவர்கள் தவறவிட்ட செல்போன் கார்த்திக்கிற்குக் கிடைக்கிறது. உடனே மயில்வாகனத்துக்குப் போன் செய்யும் கார்த்திக், வீட்டில் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

பிறகு காவல் ஆய்வாளரின் உதவியுடன் அந்த செல்போன் மூலம் ரவுடிகள் இருக்கும் குடோனைக் கண்டுபிடிக்கிறார். ரவுடிகள் இதயத்தை எரிக்கத் தயாராகும் நேரத்தில் அங்கே அதிரடியாக நுழையும் கார்த்திக், அவர்களுடன் சண்டை போட்டு இதயத்தை மீட்டு விடுகிறார். இதனால் சந்திரகலா கடும் கோபத்தில் இருக்கிறார்.

உயிரைக்காப்பாற்றுவாரா கார்த்திக்?

ஒருவழியாக இதயத்தை மீட்ட கார்த்திக், அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்படுகிறார். ஆனால், அங்கே அறுவை சிகிச்சை ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், இன்னும் 30 நிமிடங்களுக்குள் இதயம் வந்து சேரவில்லை என்றால் உயிரைக் காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வழிமறிக்கும் ரவுடிகள்... கார்த்திக்கால் முடியுமா?

நேரத்துடன் போராடிக்கொண்டு கார்த்திக் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரவுடிகள் டிராக்டரையும் பெரிய டிரெய்லரையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வழியை அடைத்து விடுகிறார்கள். டிரைவரும் இல்லாததால் அந்த வாகனங்களை நகர்த்த முடியாமல் கார்த்திக் தவிக்கிறார். அதோடு, மேப்பிலும் மாற்றுப் பாதை எதுவும் கிடைக்கவில்லை.

ஒருபக்கம் இதயத்துக்காகக் காத்திருக்கும் உயிர்... மறுபக்கம் வழியை மறித்து நிற்கும் வாகனங்கள்... கையில் இருப்பதோ வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே! இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கார்த்திக் எப்படி மீண்டு வரப்போகிறார்? சரியான நேரத்தில் இதயத்தைக் கொண்டு சேர்த்து உயிரைக் காப்பாற்றுவாரா? அல்லது சந்திரகலாவின் சதியால் எல்லாமே கைமீறிப் போகுமா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
Embed widget