மேலும் அறிய

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’.

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.

இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல்,  தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும்  இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.

இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,

“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்

“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget