’வஞ்சகர் உலகம் ’இயக்குநரின் அடுத்த படைப்பு ! - மகிழ்ச்சியுடன் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!
காமெடி கதைக்களத்துடன் , தனக்கு பொருத்தமாக இருக்கும் கதைகளை மட்டுமே சந்தானம் தேர்வு செய்து வருகிறார்.
லொல்லு சபா என்னும் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைந்த அங்கீகாரம் காரணமாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம். தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடி கதைக்களத்துடன் , தனக்கு பொருத்தமாக இருக்கும் கதைகளை மட்டுமே சந்தானம் தேர்வு செய்து வருகிறார். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அதே நேரம் படத்தில் மாற்றுதிறனாளிகளை கேளியாக பேசியுள்ளார் சந்தானம் என்ற சர்ச்சையும் கிளம்பியது. இந்நிலையில் சந்தானம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம் என்னும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கி வருகிறார். தெலுங்கில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் என்ற ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கோட், ஷூட்டுடன் கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார் சந்தானம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை , மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மனோஜ் பீதாவின் வஞ்சகர் உலகம் படத்தை மிகவும் ரசித்தேன். அவரின் அடுத்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன் “ என குறிப்பிட்டுள்ளார்.
Here is the First Look of #AgentKannayiram
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 15, 2021
Happy to see @iamsanthanam sir in @manojbeedha_dir’s direction, I really enjoyed #vanjagarulagam and now I'm curious to watch this combo soon 🙌
Best wishes to @thisisysr @Labrynth_Films and the whole team 👏🏻 pic.twitter.com/jc15Lxc6X2
குரு சோமசுந்தரம், பிக்பாஸ் சிபி, சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடித்த வெளியான திரைப்படம்தான் ’வஞ்சகர் உலகம்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியைப் பெற்றது . இந்த படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலமாகத்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ள சிபி சக்கரவர்த்திக்கு ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததற்கான வாய்ப்பு கிடைத்ததாக சிபி சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மனோஜ் பீதாவின் நடிப்பில் உருவாகவுள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.