”தூக்க மாத்திரை சாப்பிட்டேன் ..ஒருத்தன் கீழே விழுந்தா...“ - யூ ட்யூபர் இர்ஃபானின் ஷாக் தகவல்
"இன்னும் சிலர் reach க்காக சிலர் நானே யூடியூப் கிட்ட சொல்லி டெர்மினேட் பண்ண சொன்னதா கூட சொன்னாங்க."
பிரபல யூட்யூப் சேனலனான இஃபான்ஸ் வ்யூ ( (Irfans View) என்னும் சேனல் சமீபத்தில் யூடியூப் வரம்புகளை மீறியதாக கூறி திடீரென நீக்கப்பட்டது. இதனால் என்ன நடக்கிறது என்பதே புரியாத இர்ஃபான் தனது ஆதங்கத்தையும் , வருத்தத்தையும் தனது மற்றொரு யூடியூப் தளம் வாயிலாக பகிர்ந்திருந்தார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய அடுத்த நாளே We're Back என்ற வீடியோவை பதிவிட்டு மீண்டும் சேனல் கிடைத்த மகிழ்ச்சியை இர்ஃபான் பகிர்ந்திருந்தார். அதோடு என்ன நடந்தது என்பது குறித்த விளக்கம் அளித்திருந்தார். அந்த வீடியோவில், யூடியூப் பக்கம் நீக்கம் தொடர்பாக கூகுள்நிறுவனத்துக்கு தொடர்ந்து விளக்கம் அளித்தோம். பின்னர் பதில் அளித்த யூடியூப் முறையாகவே விதிகள் கடைபிடிக்கப்பட்டதாகவும், எந்த சிக்கலும் இல்லை என்றும் விளக்கம் அளித்து இர்ஃபான் வியூ மீண்டும் கிடைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இர்ஃபான் ஒரு சிறந்த உணவு ரிவியூவர். பலர் யூடியூபர்களுக்கு முன்மாதிரி என்றே கூறலாம். அவர் யூடியூபில் திடீரென சறுக்கலை கண்டதும் பலர் நம்பிக்கையிழந்தே விட்டார்கள். இன்னும் சிலரோ ஆடிய ஆட்டம் என்ன என்பது போல தகாத முறையில் விமர்சித்தும் வீடியோவை பதிவிட தொடங்கிவிட்டனர்.
View this post on Instagram
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இர்ஃபான் “ 6 வருட உழைப்பு மொத்தமா போயிடுச்சேனு மனம் உடைந்து போனேன் . சில நண்பர்கள் நல்ல ஆதரவாக இருந்தார்கள் . ஆனால் இன்னும் சிலர் பதிவிட்ட வீடியோக்களை பார்த்தேன் . அய்யோ..என்னடா இப்படியெல்லாம் போட்டுருக்கீங்க .அப்படினு ஆயிடுச்சு. ஒருத்தன் ஒரு விஷயம் செய்யும் பொழுது அவனை திட்டுறது, வன்மத்தை வெளிப்படுத்துவது நடக்கும் .அதல்லாம் சின்ன பசங்க பண்ணுற வேலைதான் . இருந்தாலும் ஒருத்தன் கீழ விழுந்துட்டான் அவனை போட்டு மிதிக்குற மாதிரி சில வீடியோ..அதை பார்க்கும் பொழுது எனக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. தூக்கமே வரவில்லை . அம்மாக்கிட்ட தூக்க மாத்திரை வாங்கி சாப்பிட்டு தூங்கினேன். செய்தி நிறுவனங்கள் தவறாக செய்திகள் வெளியிட்டாங்க. எப்படித்தான் இப்படி கணெக்ட் பண்ணுறாங்கன்னு தெரியலை. இன்னும் சிலர் reach க்காக சிலர் நானே யூடியூப் கிட்ட சொல்லி டெர்மினேட் பண்ண சொன்னதா கூட சொன்னாங்க. அதெல்லாம் பண்ண முடியுமா ? எப்படித்தான் இப்படி பேசுறாங்களோ.சேனல் வந்த பிறகுதான் குளிச்சுட்டு சாப்பிட்டேன் “ என தெரிவித்துள்ளார் இர்ஃபான்.