மேலும் அறிய

Yearender 2021: மாஸ்டர் முதல் புஷ்பா வரை... 2021ல் இந்தியாவை ஆட வைத்த ‛ஸ்டெப்’ லிஸ்ட் இதோ!

2021 ல் இந்தியாவில் கலக்கிய டான்ஸ் ஸ்டெப்கள் பின்வருமாறு :

2021-ஆம் ஆண்டு கண்ணை மூடி திறப்பதற்குள் கடந்து விட்டது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும்  பல திரைப்படங்கள் வெளிவந்து திரையரங்கு மற்றும் ஒடிடி தளங்களை நிரப்பினாலும் அந்த படங்களில் இடம்பெற்ற ஒரு சில பாடல் மற்றும் நடனம் மட்டுமே, மனதை ஆட்கொண்டது. அப்படிப்பட்ட வரிசையில் இந்த ஆண்டு ட்ரெண்ட் ஆன டான்ஸ் ஸ்டெப் பின்வருமாறு : 


மாஸ்டர் : 

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதிலும் குறிப்பாக விஜய் ஒரு கையை உயர்த்தி உடலை மட்டும் ஆடிய நடனம் உலக அளவில் பரவி வைரலானது. 

 

இந்த நடனத்தை தமிழகம், இந்தியாவை கடந்து பலபேர் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் செய்து தங்களது நடன திறமையை வெளிப்படுத்தினர். இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் பல பாலிவுட் பிரபலங்கள் வரை ஆடி பாடி அசத்தினர்.

ஜகமே தந்திரம் : 

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற "ரகிட ரகிட" என்ற பாடலின் வரிகள் மற்றும்  நடன ஸ்டெப்கள் இந்த ஆண்டில் தவிர்க்க முடியாத இடத்தில் அங்கம் வகிக்கின்றனர். இந்த பாடலில் தனுஷ் ஆடும் ரகிட ரகிட ஊ இசையின் நடனம் அனைவரையும் துள்ளிக்குதிக்க வைத்தது. படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படம் வெளியானதற்கு பின்பு பின் வரும் இசையில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா நடராஜன் நடனமும் நம்மை நாட்டியம் ஆட செய்தது.

குட்டி பட்டாசு: 

படங்களை தொடர்ந்து ஆல்பம் பாடலாக வெளிவந்த 'குட்டி பட்டாசு' பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் நடனமாடியிருந்த இந்தப் பாடலை பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான அ.ப. ராசா எழுதியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் கால் வண்ணத்தில் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

டிக்கிலோனா : 

'காதல் மன்னனான நீயும் கண்ணனனா நாலும் ஒரு அலங்காரமா' என்ற பாடல் வரிகள் இந்த ஆண்டு இன்ஸ்டா ரீல்ஸில் படுபிஸியாக வலம் வந்தது. கடந்த 1990 ம் ஆண்டு கமல் நடிப்பில் இளையராஜா இசையமைத்திருந்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், தற்போது சந்தானம் படத்தின் மூலம் ரீமேக் ஆகி யுவன் 90'ஸ், 2k என அனைவரது மனதையும் ஆட்கொண்டார். 

இந்த பாடலில் இடம்பெற்ற நடனம் இளைய மனங்களின் நெஞ்சை நிறைய வைத்தது. 

பரம சுந்தரி:

பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்த இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு மெலடி மட்டும் தான் போட தெரியும் என்ற போக்கை மாத்தி பரம் சுந்தரி மூலம் மாஸ் காட்டினார். MIMI படத்தில் ஷ்ரேயா கோஷல் குரலில் வெளியான பாடல் பரம சுந்தரி. பாடல் முழுக்க எனர்ஜியை தூவும் ட்யூனோடு இந்தப் பாடலில் களமிறங்கிய ரஹ்மானுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இதில் கீர்த்தி சனோன் ஆடிய பரம் பரம் பரம சுந்தரி நடனம் நாடுமுழுவதும் உள்ள பெண்கள் ஒருமுறையாவது இந்த நடனத்தை ஆடி பார்த்திருப்பார்கள். அப்படி ஒரு துள்ளல் இசை, துள்ளல் நடனமென நாடெங்கும் நாட்டியமாடியது. 

எனிமி : 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த அண்ணாதே படத்திற்கு போட்டியாக களமிறங்கியது எனிமி. இந்த படத்தில் விஷால், ஆர்யா போன்ற முக்கிய கதாநாயகர்கள் கலக்க, படத்தில் இடம்பெற்றிந்த மாலை டும் டும் நடனம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. இதில் டிக் டாக் புகழ் மிருணாளினி ரவி ஆடிய மாலை டும் டும், மஞ்சர டும் டும் வேற லெவலில் ட்ரெண்டு ஆனது. 

புஷ்பா : 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் இந்தப் படம் வெளியானது.

அதில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் இடம்பெற்ற வாய்யா சாமி மற்றும் ஊ சொல்றியா மாமா பாடலின் நடனங்கள் தான் இப்ப நாடுமுழுவதும் பேமஸு... 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget