மேலும் அறிய
Goodbye 2023: ”சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ” - 2023 ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கிய பிரபலங்கள்
Lookback 2023: 2023 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடையும் நிலையில் நடப்பாண்டில் விபத்தில் சிக்கிய பிரபலங்கள் பற்றி காணலாம்.

2023 ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கிய பிரபலங்கள்
2023 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடையும் நிலையில், இந்தாண்டு யாராலும் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்துள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் விபத்தில் சிக்கிய பிரபலங்கள் பற்றி காணலாம்.
- ஜனவரி 2 - அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜெர்மி ரன்னர் கடும் பனிப்பொழிவு காரணமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் - இதில் அவரின் உடலில் 30 எலும்புகள் நொறுங்கியது
- பிப்ரவரி 4 ஆம் தேதி - இம்பாலில் பங்கேற்க இருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகில் குண்டு வெடிப்பு - ஒருநாள் முன்னதாகவே சம்பவம் நடந்ததால் சன்னி லியோன் தப்பினார்
- பிப்ரவரி 22 ஆம் தேதி - மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய பேருந்து - நூழிலையில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உயிர் தப்பினர்
- மார்ச் 6 ஆம் தேதி - பாடல் ஷூட்டுக்காக சென்ற இடத்தில் மேலே கட்டப்பட்ட அலங்கார விளக்குகள் அறுந்து விழுந்து விபத்து - நூழிலையில் உயிர் தப்பினார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன்
- மார்ச் 25 ஆம் தேதி - ஸ்காட்லாந்தில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் அக்ஷய் குமாருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது
- மே 3 ஆம் தேதி - தங்கலான் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரம் படுகாயம் அடைந்தார்
- மே 7 ஆம் தேதி - ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ ஆகிய பாடல்களைப் பாடி பிரபலமான பாடகி ரக்ஷிதா மலேசியாவில் விபத்தில் சிக்கினார்
- மே 17 ஆம் தேதி - தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த அடா ஷர்மா, அப்படத்தின் படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுடன் காரில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்
- மே 28 ஆம் தேதி - ‘எங்கேயும் எப்போதும்’ நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டார் - 6 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றது.
- ஜூன் 13 ஆம் தேதி - பிரபல் ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார் - 71 வயதில் அவர் பைக் பயணம் மேற்கொண்டிருந்தார்
- ஜூலை 30 ஆம் தேதி - கன்னட நடிகர் லோகேஷ் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கை,கால்கள் துண்டான நிலையில் உயிரிழந்தார்
- ஆகஸ்ட் 17 ஆம் தேதி - முத்தழகு சீரியலில் நடித்து வரும் வைஷாலி கார் விபத்தில் சிக்கியதாக வீடியோ மூலம் தெரிவித்தார்
- அக்டோபர் 4 ஆம் தேதி - இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கினார் - கார்கள் ஒன்றுக்கொன்று முந்த முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.
- நவம்பர் 22 ஆம் தேதி - கங்குவா படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா மீது ரோப் கேமரா அறுந்து விழுந்தது -இதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது
- டிசம்பர் 5 ஆம் தேதி - ரஜினி நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் தனக்கு காயம் ஏற்பட்டதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்தார்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
ஆட்டோ
Advertisement
Advertisement