(Source: ECI/ABP News/ABP Majha)
Yashika Anand Marriage: லவ் எல்லாம் செட் ஆகாது.. திருமணத்தை அறிவித்த யாஷிகா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் யாஷிகா.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16, கவலை வேண்டாம் படங்கள் மூலம் பிரபலமான அவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலராலும் அறியப்பட்டார்.
யாஷிகா ஆனந்த் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான். மாடெலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.
அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ள யாஷிகா தற்போது மீண்டும் சினிமாக்களில் கமிட் ஆகி வருகிறார். யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் யாஷிகா.
இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர். இன்று அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இது செட்டில் ஆவதற்கான நேரம். எனக்கு சினிமா பிடிக்கும். என்ன நடந்தாலும், நான் தொடர்ந்து உங்களை மகிழ்விக்கப் போகிறேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு லவ் செட்டாகாது. உங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பதால், சினிமாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் மாப்பிள்ளையாக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. எனினும், விபத்தில் இருந்து மீண்டு வந்த யாஷிகாவுக்கு அவரது ரசிகர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்